Thursday, November 26, 2009

அவசியம் தினமும் பூண்டு சாப்பிடுங்கள்

நிறைய பேர் பூண்டை சாப்பிடுவதே இல்லை. சாப்பாட்டில் இருந்து கரிவேப்பிலையை நீக்கிவிட்டு சாப்பிடுவது போல், பூண்டையும் நீக்கிவிட்டு சாப்பிடுகிறார்கள். ஆனால் பூண்டின் மகத்துவத்தை உணர்ந்தால் கண்டிப்பாக இப்படி செய்ய மாட்டார்கள். சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் படித்ததை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கிப் படிக்கவும்.





என்ன, இனி பூண்டை அவசியம் உணவில் சேர்த்துக்கொள்வீர்கள் தானே?

Tuesday, November 24, 2009

எஸ்.எம்.எஸ். கலாட்டா - 24-11-2009

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு. பய புள்ளைக என்னமா சிந்திக்குதுன்னு பாருங்க, இந்த சிந்தனைய படிக்கும்போது பயன்படுத்தி இருந்தா எங்கேயோ போயிருப்பாங்க! சரி வாங்க, பார்ப்போம்!!

1) அம்மா: நீ நல்லா படிக்குனும் செல்லம்.
பேபி: எம்மா?
அம்மா: அப்பத்தான் நீ இந்த மெசேஜ் படிக்கிரவரு மாதிரி பெரிய அறிவாளியாக முடியும்.
பேபி: போம்மா! ஸ்கூல் போற நேரத்தில ஜோக் பண்ணாத!!
2) நைட்'ல தூக்கம் வரலையா? போய் கண்ணாடிய பாருங்க! மயக்கமே வரும். நோ..நோ.. தப்பா நினைக்காதீங்க! இதுதான் அழகுல மயங்கி விழறது!

3) குரங்குக்கும், கழுதைக்கும் என்ன வித்தியாசம்? குரங்கு இந்த மெசேஜ்-ஐ சேவ் செய்யும். கழுதை இந்த மெசேஜ்-ஐ டெலிட் செய்யும். உங்க சாய்ஸ்? ஹய்யா.... இப்ப என்ன பண்ணுவ! இப்ப என்ன பண்ணுவ!

4) என்னதான் பூமி சூரியனை சுத்தி சுத்தி வந்தாலும், பூமிக்கு சூரியன் பிக்-அப் ஆகாது. -- நாசாவில் வேலை வாங்க துடிப்போர் சங்கம்.

5) ரொம்ப த்ரில்லான ஸ்டோரி.. ஒரு மனிதன் நாடு ராத்திரியில கொஞ்சம் கூட பயம் இல்லாம காட்டுல சுத்திகிட்டு இருந்தான். ஏன் தெரியுமா? ஹமாம் (HAMAM) இருக்க பயமேன்? ... நோ .. நோ .. அழக்கூடாது...

6) ஐஸ் கிரீம் சாப்பிடக்கூட பயமா இருக்கு... ஏன் தெரியுமா? ஏன் இதயத்தில் இருக்கும் உனக்கு குளிரும் என்பதால்... இப்படிக்கு ஐஸ் கிரீம் வாங்க காசில்லாமல் ஐஸ் வைப்போர் சங்கம்.

7) உங்களுக்கு ராணி என்று ஒரு மனைவி ஏற்கனவே இருப்பதை ஏன் என்னிடம் சொல்லவில்லை?
உன்னை ராணி மாதிரியே வைத்துக்கொள்வேன் என்று முன்பே சொன்னேனே!

8) சாப்ட்வேர் என்ஜினியர்ஸ் படம் தயாரிச்சா என்ன மாதிரி டைட்டில் இருக்கும்?
G.Mail S/o e-mail
RAM தேடிய motherboard
7GB Rainbow colony
எனக்கு 20MB உனக்கு 18MB
Program ஆயிரம்
ஒரு MOUSE -இன் கதை.
மானிட்டருக்குள் மழை
எல்லாம் PROCESSOR செயல்
நான் GRAPHIC டிசைனர்
C மனசுல C++
9) நான் காம்ப்ளான் பாய்!
நான் காம்ப்ளான் கேர்ள்!
அப்பா: என்ன கொடும சார் இது? நான் பெத்த பிள்ளைங்க எவன் பேரையோ சொல்லிக்கிட்டு திரியுதுங்க!
10) நபர் - 1 : இந்த டீ-இல் நிறம் இல்லை!
நபர் - 2 : இந்த டீ-இல் சுவை இல்லை!
நபர் - 3 : இந்த டீ-இல் திடம் இல்லை!
டீ-கடை காரர்: அது டீ-யே இல்லை. எச்சி கிளாஸ் கழுவுன தண்ணி....

11) 1MAY, 2MAY, 3MAY, 4MAY, 5MAY, 6MAY, 7MAY.....
என்ன பாக்குறிங்க? நாளைக்கு நான் ஒன்னு-மே அனுப்புலன்னு நீங்க சொல்லக் கூடாதுல்ல? அதுக்குதான்!

12) ஒரு பொண்ணு வண்டி ஓட்டுன அதை டெக்னிக்கலா எப்படி சொல்வாங்க?
"PEN DRIVE" -ன்னு சொல்வாங்க!

13) எப்படி ஹெலிகாப்ட்டர் விபத்து ஏற்பட்டது?
இமயமலை மேல பறக்குரப்ப ரொம்ப குளிரா இருந்துச்சின்னு FAN -ஐ நிறுத்தி விட்டேன்!

14) காலேஜ் சம்பந்தப்பட்ட வடிவேல் டயலாக்ஸ்:
Class Test: சொல்லவே இல்ல...
Teaching: முடியல ...
Exam: உக்காந்து யோசிப்பாயிங்களோ....
Arrears: ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிற மாதிரி...
Bit: எதையும் பிளான் பண்ணி பண்ணனும்...
Result: இப்பவே கண்ண கட்டுதே...
Degree: வரும்... ஆனா வராது....

15) உன்னைப் போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பதால்தான் "கொஞ்சம்" மழை பெய்கிறது... இல்லை என்றால்?.....
"நிறையவே" பெய்யும்!....

கலக்கல் தொடரும்....

Thursday, November 5, 2009

மாநில நுகர்வோர் சேவை மையம்

24 மணி நேரமும் செயல்பட கூடிய சேவை மையம் சமீபத்தில் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது. காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு மணி வரை நேரடியாக உதவியாளரிடம் பேசலாம். 24 மணி நேரமும் IVRS எனப்படும் சேவை மூலம் நுகர்வோர் பாதுகாப்பு சம்பந்தமான தகவல்களை அறியலாம்.

பொது விநியோகம் சம்பந்தமான மற்றும் நீங்கள் கடைகளில் வாங்கும் பொருட்களில் ஏற்படும் குறைகளுக்கு இந்த சேவை மையத்தை தொலைபேசி, தபால் மற்றும் ஈ-மெய்ல் மூலமாக தொடர்பு கொண்டு தெருவிக்கலாம். மூன்று நாட்களில் பதில் கிடைக்கும் என அரசு சொல்கிறது.

இது சம்பந்தமாக அரசு சார்பில் வெளியான தகவல் அறிய கீழ் காணும் படங்களை க்ளிக் செய்து அறிந்து கொள்ளவும்.




குறிப்பு: இது அரசுக்கான விளம்பரம் அல்ல! நுகர்வோர்க்கான விழிப்புணர்வுக்காக!!