Thursday, December 31, 2009

விடை பெறுகிறேன், அன்பு நெஞ்சங்களே!

நான் இன்று மட்டுமே
இருப்பேன்!
என்னைப் பற்றி
கவலைப் படவேண்டாம்!
என்னைப் பற்றி
நினைக்கவும் வேண்டாம்!
நான் இது வரை
துன்பங்களும்
தொந்தரவுகளும்
கொடுத்திருந்தால்
மன்னிக்கவும்!
நீங்கள்
நினைத்தாலும்
வரமாட்டேன்!
எல்லோரும்
சந்தோசமா
இருங்க!

---இப்படிக்கு
>
>
>
>
>
>
>
>
>
>
>
>

>
>
>
>
>
>

>
>
>
>
>
>

>
>
>
>
>
>

2009.




அன்பு நெஞ்சங்களே!
உங்கள் அனைவறுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
எல்லா வளமும், நலமும், இனிமையும், நிம்மதியும், அமைதியும் பெற்று வளமுடன் வாழ
வாழ்த்துக்கள்! இறைவன் அருள் புரிவாராக!
வாழ்க வளமுடன்!

Saturday, December 12, 2009

எஸ்.எம்.எஸ். கலாட்டா - 14-12-2009

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.



1) எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.

2) தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.

3) தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!

4) ஏங்க! இந்த வீட்ல ஒன்னு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்!
நீங்க ரெண்டு பேருமே கெளம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்!!

5) என்ன நம்ம கல்யாணப் பத்திரிக்கைய இப்படிப் பாத்துகிட்டு இருக்கீங்க?
எக்ஸ்பயரி டேட் இருக்குதான்னு பாக்குறேன்!

6) டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?
சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!

7) யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது? கடிகாரத்தில் பேட்டரியை
எடுத்துவிட்டுப் பாருங்கள்!
டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!

8) இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க
லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!

9) ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொல்லி போடணும்!
போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொல்லி வச்சுரவா?

10) பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்?
தெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க!

11) அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
சரோஜா! ஏன் கேக்குற?
அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?

12) பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!

13) காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல!
ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ
பரவாயில்லை என்று!!

14) மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
தெரியலையா?
அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?

15) அதிக நேரம் உன் அழகை கண்ணாடியில் பார்க்காதே!
உன் அழகைப் பார்த்து கண்ணாடிக்கும் உன் மேல் காதல் வரும்!!
இன்னும் இது மாதிரி நிறைய ஜோக்ஸ் இருக்கு! அப்புறம் சொல்றேன்!!

16) மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை
காட்டி நிறுத்தசொல்றாரு!
அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு
உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு?

17) டாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்!
பேசன்ட்: சரி டாக்டர்! நாளைக்கே நான்கு மயில் வாங்கி நடக்க வைக்கிறேன்!!

18) ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோவ்லா உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டு
பொண்ணு தெரியுமா?
------ பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.

19) அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?
மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே
ஓடி போய்டாங்க!!

20) கொடூர மொக்கை!
என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும், உங்க மொபைல்'ல
வரும் பொது "ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!! எப்பூடி....


கலக்கல் தொடரும்...

Wednesday, December 9, 2009

போலியான தகவல்கள் மூலம் வெளிநாடு செல்லாதீர் (50-வது பதிவு)



வருகை புரியும் அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி! இது என்னுடைய 50 - வது பதிவு. சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு இந்த வலைப் பக்கத்தை துவக்கினேன். நண்பர் கணேஷ்(http://sellursingam.blogspot.com/) தான் இந்த வலைப் பக்கத்தை துவக்க வழி காட்டினார். இந்த நேரத்தில் அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நண்பர் டவுசர் பாண்டி (http://www.athekangal.blogspot.com/) தான் முதன் முதலில் நண்பராக இந்த வலைப் பதிவின் மூலம் நெருங்கிய நண்பரானார். இது வரை ஒரு முறை கூட அவரை சந்திததில்லை. அவருடைய சென்னை தமிழின் நடையை ரசித்து நண்பரானேன். அவருக்கும் மிக்க நன்றி.

என்னையும் ஒரு பதிவராக ஏற்றுக்கொண்டு பின் தொடர்பவர்களாக இணைத்துக்கொண்ட அனைத்து நல் இதயங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் வருகை புரிந்தும், கருத்துக்களை பகிர்ந்துகொண்டும், எனது பதிவுகளுக்கு வாக்களித்து ஊக்கப்படுத்திகொண்டும் இருக்கின்ற அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன். உங்களின் ஆதரவுடன் என் வலைப்பயணம் தொடரும் என நம்புகிறேன்.

வாழ்க வளமுடன்!

போலியான தகவல்கள் மூலம் வெளிநாடு செல்லாதீர்



படிக்காத பாமரர் முதல் மிகவும் படித்த நபர்கள் வரை வெளி நாட்டில் வேலை பார்க்கும் மோகம் இன்று வரை அதிகமாகத்தான் இருக்கிறது. எத்தனையோ நன்மை தீமைகள் இருக்கிறது என்றாலும், இதில் உள்ள ஆர்வம் பலருக்கும் குறைவதில்லை. இங்கே நாம் அலசப்போவது வெளி நாடுகளுக்கு செல்லுவதை குறை கூற அல்ல, ஆனால் எப்படியாவது வெளி நாட்டில் வேலை கிடைத்து சென்றால் போதும் என்று தவறான தகவல்களை கொடுத்து செல்வதில் உள்ள பாதகத்தை கூறத்தான் இந்தபதிவு.

நீங்கள் எந்த சட்ட மீறல்களையும் செய்யலாம், பிரச்னை வராதவரை. ஆனால் பிரச்னை என்று வந்து விட்டால் அவ்வளுவுதான், நீங்கள் தொலைந்தீர்கள், இதுவரை நீங்கள் செய்துவந்த எல்லா சட்ட மீறல்களும் நோன்டி ஆராயப்பட்டு, வசமாக சிக்கிக்கொல்வீர்கள். உதாரணமாக சமீபத்தில் ஒரு பள்ளி வேன் விபத்துக்குள்ளானபோது, அந்த பள்ளி நிர்வாகத்தால் செய்யப்பட்ட அனைத்து அத்துமீறல்களும் வெளிச்சத்திற்கு வந்தன. அந்த வேன் மட்டும் பிரச்னை இல்லை, அந்த பள்ளி உரிமத்தைக் கூடப் புதுப்பித்துக் கொள்ளவில்லை. அந்த பள்ளி மட்டுமல்ல, பல பள்ளிகளின் வாகனங்கள் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. யோசித்துப் பாருங்கள், அந்த ஒரு பள்ளியின் வேன் மட்டும் அன்று விபத்திற்குள்ளாகாமல் இருந்திருந்தால், இன்னும் எத்தனை வருடங்களுக்கு இத்தனை சட்ட மீறல்களும் அரங்கேறி கொண்டு இருந்திருக்கும். என்னடா, வெளி நாடு அது இது என்று சொல்லிவிட்டு சம்பந்தம் இல்லாமல் இதை சொல்லிக்கொண்டு இருக்கிறேன் என்று நினைக்காதீர்கள், இருக்கிறது.

இது போலத்தான் நீங்கள் போலியான தகவல் மூலம் வெளிநாடு செல்லும்போதும் ஏற்படுகிறது. எந்த பிரச்னையும் ஏற்படாதாவரை ஒன்றும் இல்லை, ஆனால் பிரச்னை என்று வந்துவிட்டால், பின் மிகப் பெரிய சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும், நீங்கள் மட்டுமல்ல, இங்குள்ள உங்கள் குடும்பமும்.

சமீபத்தில், ஒரு மத்திய இணை அமைச்சர் ஒரு அலுவலக ரீதியான மீட்டிங்கில் கூறியதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நம் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் அரபு நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். எப்படி? இலங்கை பாஸ்போர்ட்டைப் பயன்படுத்தி. ஒன்றும் பிரச்சனை இல்லை இதில், அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டு இறக்காதவரை. இறந்து விட்டார். என்ன செய்வது? இங்குள்ள அவரின் குடும்பத்தார், அவரின் உடலை இந்தியாவிற்கு எடுத்து வர அரசின் உதவியை நாடி இருக்கிறார்கள். நம் அரசும் உதவ தயாராகி அங்குள்ள இந்திய தூதரகத்தின் மூலம் தொடர்பு கொண்டபோது, அவர்கள் உடலை இந்தியாவுக்கு அனுப்ப மறுத்து விட்டார்கள். பின் இலங்கை குடிமகனை (இலங்கை பாஸ்போர்ட்டை பயன்படுத்தியதால்) இந்தியாவிற்கு அனுப்ப எப்படி சம்மதிப்பார்கள்? யோசித்துப் பாருங்கள். இதைப் போல பல இறந்தவர்களின் உடல்கள் அது போன்ற நாடுகளில் உள்ளதாம். அனைத்துக்கும் மூல காரணம், தவறான தகவல்கள் கொடுத்து சென்றதால்.

பின் மிகப் பிரயத்தனமான முயற்சிகளின் மூலம், அந்த நாட்டு அரசு அவரின் உடலை இந்தியாவிற்கு அனுப்ப சம்மதித்தது, ஒரே ஒரு நிபந்தனையுடன். அந்த நிபந்தனைப் படி, இங்குள்ள குடும்பத்தாரின் DNA -வை அனுப்பி, இறந்தவரின் DNA வுடன் ஒப்பிட்டு அது பொருந்திப் போகும் பட்ச்சத்தில், உடலை அனுப்ப சம்மதிக்கும்.

ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள், இத்தனை சிரமங்கள் தேவையா என்று. சரியான தகவல் மூலம், வெளி நாடு செல்லும் நபர்கள் பலரே, சிரமத்திற்கு ஆளாவதை செய்தித் தாள்களில் படிக்கிறோம். பின், தவறான தகவல் மூலம் செல்லும் நபர்கள் எத்தனை சிரமங்களுக்கு ஆளாக நேரிடும்? இங்கே நான் கூறி இருப்பது ஒரு உதாரணம் தான், இதைப் போல பல சிரமங்களை சந்திக்க நேரிடும், தவறான தகவல்கள் அளிப்பதால். இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொண்டு மிக கவனமுடன் நூறு சதவீதம் சரியான தகவல்களை அளித்து வெளி நாடு செல்லுங்கள்.

வாழ்க வளமுடன்!

Monday, December 7, 2009

எஸ்.எம்.எஸ். கலாட்டா - 07-12-2009

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.



1) ப்ளைட்ல போயிட்டு இருக்கும்போது, திடீரென ஒரு நபர் எழுந்து "ஹாய் ஜாக் " என்கிறார். உடனே எல்லோரும் பயந்து போய் கையை தூக்கிக் கொள்கிறார்கள். அவர்களில் ஒருவர் எழுந்து "ஹாய் ஜான்" என் சொல்லி அவரைக் கட்டிப் பிடித்துக் கொள்கிறார். நல்லா கெளப்புராங்கையா பீதிய!.....

2) மூன்று மோசமான வாழ்க்கை நிலைகள்:
டீன் ஏஜ் : டைம், எனெர்ஜி இருக்கும், பணம் இருக்காது!
வொர்கிங் ஏஜ்: பணம், எனெர்ஜி இருக்கும். டைம் இருக்காது.
ஓல்ட் ஏஜ்: டைம், பணம் இருக்கும். எனெர்ஜி இருக்காது.

3) அப்பா: உன் வயசுல அப்துல் கலாம் ரொம்ப படிச்சாராம், நீயும் இருக்கியே தண்டம்!
மகன்: அவர் உன் வயசுல ஜனாதிபதி ஆயிட்டார். நீயும் இருக்கியே முண்டம்!!

4) கண்டக்டர்: டிக்கெட் எடு!
பயணி: பின்னால எடுப்பாங்க!
கண்டக்டர்: யாரும் எடுக்கல!
பயணி: அப்ப முன்னாடி எடுப்பாங்க!
கண்டக்டர்: யாரும் எடுக்கல!
பயணி: அப்போ நான் மட்டும் இளிச்சவாயனா? போய்யா!!
கண்டக்டர்: !???

5) மேத்ஸ் மிராக்கில்!
111/(1+1+1) = 37
222/(2+2+2) = 37
333/(3+3+3) = 37
444/(4+4+4) = 37
555/(5+5+5) = 37
666/(6+6+6) = 37
777/(7+7+7) = 37
888/(8+8+8) = 37
999/(9+9+9) = 37

6) எடிசன் பிறந்த நாளை இரண்டு நிமிடம் மின்சாரத்தை நிறுத்தி ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் கொண்டாடுகிறார்கள். ஆனால், நாம் அவர் மீது உள்ள மிகுதியான மரியாதையால் , தினமும் இரண்டு மணி நேரம் மின்சாரத்தை நிறுத்தி கொண்டாடுகிறோம்.

7) டாக்டர்! என்னோட மனைவி ஒரு லிட்டர் பெட்ரோல் குடித்து விட்டாள்! என்ன செய்வது?
அறுபது கிலோ மீட்டர் ஓட சொல்லுங்க! சரியாகி விடும்!!

8) தொண்டை கர கரப்பாக இருக்கிறதா? "சர்ப் எக்ஸ்செல் " சாப்பிடுங்க! இந்த கர அந்த கர எந்த கரையா இருந்தாலும் போய்டும்!

9) ஒரு காக்கா பறந்து போயிட்டு இருக்கும்போது ஒருத்தன் மேல ஆய் போயிடுச்சாம்! உடனே அவன் ஏ கூமுட்ட காக்காவே! ஜட்டி போட வேண்டியதுதானே! என்று கேட்கிறான். உடனே காக்கா "அட ங்கொய்யாலே! நீ ஜட்டி போட்டுட்டு தான் ஆய் போவியாடா ?!?" என்றது.

10) மகன்: குட்டிப் பாப்பா எப்படி உருவாகுதுப்பா?
அப்பா: ஒரு தேவதை இரவு வந்து உங்க அம்மா வயத்துல பாப்பாவ வச்சிட்டு போய்டும்!
மகன்: அப்ப நீ டம்மி பீசாப்பா?
----- LKG டெரர்ஸ்

11) ஒரு யானை ஒரு கிணத்துல எட்டிப் பார்த்துச்சாம்! உடனே ஒரு எறும்பு அந்த யானையை கடித்து விட்டதாம்!
ஏன்?
ஏன்னா அந்த கிணத்துல அந்த எறும்போட பிகர் குளித்துக்கொண்டு இருந்ததாம்!

12) வெட்டி சம்பளம் வாங்குபவர் யார்?
யார்?
யார்?
யார்?
டைலர் மற்றும் பார்பர்! ஹா..ஹா.. இப்படி வித்தியாசமாக தின்க் பண்ணுங்க!

13) அன்று அவள் கைப் பிடிக்க என்னை கை விட்டாயே! இன்று அவள் கை விட்டவுடன் உன் கையை தாங்கிப் பிடிப்பது நான்தானே? by "GOLD FLAKE & KINGS"


14)
பத்தாவது மாடியில உட்கார்ந்து ஒருத்தன் ரொம்ப நேரமா தின்க் பண்ணிக்கிட்டு இருந்தான். அப்ப ஒன்னாவது மாடியில இருந்து திடிரென ஒருத்தன், "அப்துல் காதர்! உன்னோட பையன் 2- வது மாடியில இருந்து விழுந்துட்டான்" என்று கத்தினான்! உடனே தின்க் பண்ணிக்கிட்டு இருந்தவன் உணர்ச்சி வசப்பட்டு குதித்துவிட்டான். 8 - வது மாடிக்கிட்ட வரும்போது எனக்கு பிள்ளையே இல்லையே.. யார சொல்றான்...7 - வது மாடிக்கிட்ட வரும்போது எனக்கு இன்னும் கல்யாணமே ஆகலையே... யார சொல்றான்... 4 - வது மாடிக்கிட்ட வரும்போது என் பேரு அப்துல் காதரே இல்லையே.. யார சொல்றான்! ஐயோ.... செத்தேன்!!!!!

15) நர்ஸ்: ஊசி போட்டதும் இடுப்ப தடவி விடுங்க!
மேன்: வாவ்! சூப்பரா இருக்கே...
நர்ஸ்: சனியனே...நான் தடவ சொன்னது உன் இடுப்ப!!!

16) ஆசிரியர்: ஏண்டா லேட்?
மாணவன்: சார், பஸ்ல அசந்து தூங்கி விட்டேன்!
ஆசிரியர்: ராஸ்கல்! கிளாசுக்கு வரதுக்குள்ள அப்படி என்ன அவசரம்?

17) பெண்களுக்கு சுடிதார் கண்டுபிடித்தவன் வாழ்க!
ஆனால் துப்பட்டா கண்டுபிடித்தவன் ஒழிக. அட வீல்'ல சிக்குதப்பா... (ஒரு நிமிசத்துல என்ன தப்பா நினச்சுடீங்களே... )

18) லைப்'ல கேர்ள் பிரண்ட் கெடச்சா லைப் ஜாலி!
அதே கேர்ள் பிரண்ட் லவ்வர் ஆனா பாக்கட் காலி!!
அதே லவ்வர் மனைவியா வந்தா... மவனே நீயே காலி!!!

19) நண்பன் - 1: டேய்! மச்சி... உனக்கு எஸ்.எம்.எஸ் ப்ரீ தானே! எனக்கு அனுப்புடா!!
நண்பன் - 2: தோடா! எனக்கு கூடத்தான் இன்கமிங் ப்ரீ... நீ எனக்கு போன் பண்ணேன்!

20) மாணவன்: சார்! இன்னும் ஒரு மாதத்துக்கு எனக்கு பரிச்சை பேபெர்ல முட்டை போடாதீங்க!
ஆசிரியர்: ஏண்டா?
மாணவன்: எங்க அப்பா ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டிருக்கார்!


கலக்கல் தொடரும்...

Wednesday, December 2, 2009

மன அழுத்தத்தைக் குறையுங்கள்



இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் எல்லோருக்கும் பெரும்பாலும் இருக்கும் ஒரு பிரச்சனை மன அழுத்தம் என்பது. இது அமைதியாக இருந்து நம் உடல் நலத்தை பாதிக்கக் கூடியது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இது தன் சுய ரூபத்தை காட்டும். எனவே இதை மறக்காமல் கவனத்தில் கொண்டு மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி நம் ஆரோக்கியத்தை பேணிக் கொள்ளவேண்டும்.

மன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்:

1) நமக்காக நேரத்தை அவசியம் ஒதுக்க வேண்டும். டென்ஷன் ஏற்படும்போதும், அசதியாக இருக்கும்போது போதிய ஓய்வை வழக்கமாக எடுத்துக் கொள்ளவேண்டும்.

2) நேரத்தையும், நமது வேலைகளையும் கவனமாக திட்டமிடுதல் வேண்டும்.

3) ஆரோக்கியத்தை பேண வேண்டும்.

4) பெரிய மாறுதல்களை நமது வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ள பழகிக் கொள்ள வேண்டும்.

5) யாரிடமாவது நமது பிரச்சனைகளை மனம்விட்டு பகிர்ந்து கொள்ள வேண்டும்.

6) நமது குடும்பத்தாரிடமும், நண்பர்களிடமும் ஆரோக்கியமான உறவை பேண வேண்டும்.

7) நம்மை நாமே நேசிக்காவிட்டால் பின் யார் நேசிப்பது? எனவே உங்களை நீங்கள் நேசியுங்கள். நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

8) "முடியாது" என்பதை தேவைப்படும் பொது பயன்படுத்த பழகிக் கொள்ளவேண்டும்.

9) எதை விரும்புகிறீர்களோ அதை செய்யுங்கள். நீங்கள் எதை செய்கிறீர்களோ அதை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

10) மன ஆரோக்கியம் இல்லாமல் உடல் ஆரோக்கியம் இல்லை என்பதை உணருங்கள்.

வாழ்க வளமுடன்!