Monday, December 13, 2010

எஸ்.எம்.எஸ் கலாட்டா – 13-12-2010

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.


1) 4 விதிகள் புலியைப் பிடிக்க....
  a) நியூட்டன் விதி:-
        முதலில் புலி உங்களை பிடிக்கட்டும். பின் அதை நீங்கள் எளிதில் பிடித்து விடலாம்.
 b) ஐன்ஷ்டீன்  விதி:-
      புலி டயர்ட் ஆகும் வரை அதை துரத்தி, அது டயர்ட் ஆன பிறகு அதை பிடித்து விடவும்
 c) வீரப்பன் விதி:-
     முதலில்  புலியின் மனைவியை கடத்திவிடவும். பின் புலியை சரண்டர் ஆக சொல்லி எச்சரிக்கவும்.
 d) இந்தியன் போலீஸ் விதி:-
      ஒரு பூனையை பிடித்து, அது தன்னை புலி என்று ஒத்துக் கொள்ளும் வரை அடித்து நொறுக்கவும்.

2) அறிவாளிக்கு ஒரு கேள்வி!
?
?
?
?
?
?
?
?
?
?
?
அதான் அறிவாளிக்குன்னு சொன்னோம்ல..
அப்புறம் என்ன லொட்டு லொட்டுன்னு அமிக்கிகிட்டு...
?
?
?
?
மறுபடியும் பார்ரா!...

3) ஒரு நாள் ஒரு குட்டி எலி பெரிய பூனைகிட்ட மாட்டிகிச்சி...
  அப்பா அந்த குட்டி எலி, பூனைகிட்ட "அண்ணே.. நான் எங்க அப்பா அம்மாவுக்கு ஒரே பையன்...
   என்னை விட்டுடுங்க.. சாப்டிராதீங்க"ன்னு சொன்னுச்சாம்.. அதுக்கு அந்த பெரிய பூனை
   என்ன சொல்லுச்சாம் தெரியுமா?
?
?
?
?
?
?
?
?
?
?
ஹலோ! கதை கேக்குற வயசா இது?
போய் வேலைய பாருங்க! போங்க!!

4) நான் ஸ்கூல்'ல படிச்சிகிட்டு இருக்கும்போது,  ஒரு நாள் கிளாஸ்'ல பாடம் நடத்திகிட்டு இருக்கும்போது
  பேசிகிட்டு இருந்தேன். அப்போ எங்க மிஸ் "நான் இனி கிளாஸ்'ல பேச மாட்டேன்" என்று 50 தடவை
  எழுத சொல்லி தண்டனை கொடுத்தாங்க. நான் எப்படி எழுதினேன்னு  தெரியுமா?
?
?
?
?
?
?
?
for (int i= 1; i <= 50; i++)
{
  printf("\n I won't talk in Class");
}
எப்பூடி?
நாங்கல்லாம் அப்பவே அப்படி!

5) மலர் தூவியும்
    மனம் இறங்காத அவள்
    இன்று
    கண்ணீருடன்
    மலர்
    தூவுகிறாள்....
    என்
     திருமணத்தில்....
    (கல்லறை எல்லாம் இல்ல) நமக்கு 1000 பிகர் மடியும் மச்சி!

6) லவ் பண்ணுக சார்! லைப் நல்லா இருக்கும் --- from MYNA...
    படிச்சு தொலைடா! லைப் நல்லா இருக்கும் --- from my Nainaa...

7) ஐஸ்-கிரீம் கடைக்கும், ஒயின் கடைக்கும் என்ன வித்தியாசம்?
    லவ்  ஐஸ்-கிரீம் கடைல ஆரம்பிக்கும்!
    ஒயின் கடை(wine shop)ல முடிஞ்சு போய்டும்!!

8) உறங்க
    மனமில்லை
    நினைவில் நீ...
    உறங்கினால்
    விழிக்க
    மனமில்லை
    கனவில் நீ......

    வர வர பேய் பிசாசுங்க தொல்லை தாங்க முடியலப்பா!

9)  ஏங்க சார், பையன போட்டு இப்படி அடிக்குறீங்க?

       பின்ன என்னங்க? கோழி ஏன்டா முட்டை போடுதுன்னு கேட்டா,
      அதுக்கு 1, 2,3... தெரியாது, அதனால முட்டை போடுதுன்னு சொல்றான்!

10) நீ பார்க்கும்
      பார்வையும்
     சிரிக்கும்
     சிரிப்பும்
     நீ என்னை
    காதலிக்கிறாய்
    என்பது
    புரிகிறது...
    ஆனால்
     வேண்டாம் பெண்ணே!
    மீசை கூட
    வளராத வயதில்
    என்னால்
    தாடி வளர்க்க
     முடியாது!!
   --- LKG Last Bench Boy...

வாழ்க  வளமுடன்!

Thursday, December 9, 2010

எப்படி இது சாத்தியமாயிற்று?

இன்று எங்கள் அலுவலகத்திற்கு ஒரு வேலை விசயமாக  ஒருவர் வந்தார். போகும்போது அவருடைய  விசிட்டிங் கார்டு கொடுத்துவிட்டு போனார். மயக்கம் வராத குறைதான். அவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது. அழுவதா அல்லது சிரிப்பதா தெரியவில்லை.  அவருக்கு ஒரு 40 - 45 வயதிற்குள்தான் இருக்கும். எப்படி சாத்தியமாயிற்று?(!)?....

நாட்டில் இப்படியும் இருக்கிறார்களா?...

உங்கள் பார்வைக்காக அவருடைய தனிப்பட்ட அடையாளத்தை மறைத்துவிட்டு இங்கே கொடுத்திருக்கிறேன்...  எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.... புரிந்தவர்கள் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போங்கள்,  தயவுசெய்து..



ஆனால் அவருடைய தன்னம்பிக்கையை பாராட்டித்தான் ஆகவேண்டும்... இல்லீங்களா?......

வாழ்க வளமுடன்!

Friday, November 26, 2010

நகைச்சுவைப் பக்கம் - 26-11-2010


நண்பர் மெயிலில் அனுப்பியதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஏற்கனவே படித்து இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள். நான் வாய் விட்டு சிரித்தேன். அதை உங்களுடன் பகிர்கிறேன். அவ்வளவே....

1) ஒரு கல்லூரி மாணவனின் லீவ் லெட்டர் --- துறை தலைவருக்கு....






அனுப்புதல்
           நான் தான்,
          உன்  டிபார்ட்மென்ட்  தான் ,
          உன்  காலேஜ் தான்,
           உன்  சிட்டி  தான்.
     
     பெறுதல்

            உனக்கு  தான்,   
            இந்த  டிபார்ட்மென்ட்  தான்,
            இந்த  காலேஜ் தான்,
           இந்த  சிட்டி  தான்.

    மதிப்பிற்குரிய ஐயா,
     என்ன  பண்ண  முடியுமோ  பண்ணிக்கோநான் இன்னிக்கு வர மாட்டேன்.

தங்கள் கீழ்படிந்துள்ள
நான்தான்.

2) ஒரு கம்பெனியின் முதலாளி கடத்தப் பட்டார்
(சிரிக்க மட்டுமே) 
எல்லா ஊழியர்களும் மிகவும் வருத்தமடைந்தனர். அங்கும் இங்குமாக அலைகின்றனர். சிலர் சத்தமாக என்ன செய்யலாம் என தங்களுக்குள் ஆலோசனை செய்கின்றனர். இதை புதிதாக பயிற்சியாளர்களாக (Trainees) சேர்ந்த ஊழியர்கள் பார்த்து, தங்கள் சீனியர்களிடம், "என்ன நடக்கிறது இங்கே? என்ன பதட்டம்?" என கேட்கிறார்கள்.

"தீவிரவாதிகள் நம் முதலாளியைக் கடத்தி விட்டார்கள்! .
அவர்கள் பிணையத் தொகையாக 10 கோடி கேட்கிறார்கள். தரவில்லை எனில்
பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவதாக சொல்கிறார்கள்"
என்று நிலைமையை விளக்கினர்  சீனியர்.

மேலும் "ஒவ்வொரு டெஸ்க்காக சென்று வசூல் செய்து கொண்டு இருக்கிறோம்" என்றனர்.

உடனே உதவ நினைத்த, அதிர்ந்த பயிற்சி ஊழியர் ஒருவர் " ஒவ்வொரு தலைக்கும் எவ்வளவு நிர்ணயம் செய்து இருக்கிறீர்கள்? ஆவெரேஜாக?".... என்று வருத்தத்துடன் கேட்டார்...
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
  "கிட்டத்தட்ட ஒரு லிட்டர்" என்றார் சீனியர்.

வாழ்க வளமுடன்!

 

Wednesday, October 20, 2010

மோகனச்சாரலின் காபி ஷாப் - 20-10-2010


ஒரு வழியாக காமன் வெல்த் கேம்ஸ் வெற்றிகரமாக முடிவடைந்து இந்தியாவும் முன் எப்போதும் இல்லாத அளவு  பதக்கங்களை குவித்துள்ளது. ஆனால் அதை நினைத்து பெருமிதமோ, மகிழ்ச்சியோ கொள்ளாத அளவுக்கு ஊழல் செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. ஒரு  நல்ல நிகழ்வை இந்த ஊழல் நிகழ்வுகள் நாசம் செய்து விட்டதை நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது.
*************************************************************
இன்று ஒரு ஸ்பெசல் தேதிங்க!
 அதாவது 20-10-2010 
தேதி, மாதம் இரண்டையும் இணைத்தால் இந்த வருடம் வந்து விடும்.  உடனே இதைபோல் பல உதாரணம் சொல்லலாம் என சொல்லாதீர்கள்.  இன்றைய   தேதியின் சிறப்பை சொன்னேன். அவ்வளவுதான்!
*************************************************************
தற்போது தனியார் கல்லூரிகளில் B.Ed கோர்சை கூவி கூவி விற்றுக்கொண்டு இருக்கிறார்களாம். அதாவது ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் செலுத்தி விட்டால் நீங்கள் கல்லூரியே செல்ல வேண்டாம். ஏன் ரெகார்ட் வொர்க்கையும் அவர்களே செய்து கொடுத்து விடுவார்களாம். தேர்வுக்கு மட்டும் நீங்கள் சென்றால் போதுமாம்.  இவர்கள்தான் நாளைக்கு மாணவர்களுக்கு பாடம் நடத்தப் போகிறவர்கள்! நாடு போகும் போக்கை நினைத்தால்...
என்ன சொல்வது?..............
*************************************************************
நீங்கள் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் பொது உங்கள் வீட்டின் சாவியை நம்பிக்கையான பக்கத்து வீட்டில் கொடுத்து செல்வது உத்தமம். இது பல வழிகளில் உதவியாகவும், பல சிரமங்களை தவிர்க்கவும் உதவும். உதாரணமாக  உங்கள் வீட்டின் தண்ணீர் குழாயை நீங்கள் மறதியாக திறந்துவிட்டே சென்று இருக்கலாம். பக்கத்து வீட்டுக்காரர் போன் செய்து உங்களால் நாங்களும் பாதிக்கபடுகிறோம் என்று சொன்னால் என்ன செய்வீர்கள்? ஒன்று நீங்கள் உங்கள் வேலையை ஒதுக்கி வைத்து விட்டு திரும்ப வேண்டும். அல்லது உங்கள் வீட்டின் பூட்டை உடைக்க சம்மதிக்க வேண்டும். இப்படி பல.... காஸ் லீக் ஆகலாம்.. ஆதலால் பல சிரமங்களை தவிர்க்க உங்கள் வீட்டின் சாவியை நம்பிக்கையான பக்கத்து வீட்டில் கொடுத்து செல்வது உத்தமம்.
*************************************************************

நகைச்சுவைப் பக்கம்.....
திருட்டை கண்டு பிடிக்கும் ஒரு மெசினை அமெரிக்காவில் கண்டுபிடித்தார்களாம். அது அமெரிக்காவில் ஒரு மணி நேரத்தில் 100 திருடர்களை கண்டுபிடித்ததாம். இங்கிலாந்தில் ஒரு மணி நேரத்தில் 50 திருடர்களை கண்டுபிடித்ததாம்.
சிங்கப்பூரில் 25 திருடர்களை கண்டுபிடித்ததாம்.
நமது இந்தியாவில்?
?
?
?
?
?
15 நிமிடத்தில் அந்த மெசினையே திருடி விட்டார்களாம்.
ங்கொய்யால!....... யாருட்ட?!?.............

ஒரு சினிமா  ஹீரோ:- நான் ஒரு படம் நடிக்கணும்! காசே செலவு பண்ணகூடாது... நிறைய தியேட்டர்ல ஓடனும்... ஒரு வருஷம் ஓடனும்...A, B, C சென்டர்ல என எல்லா இடத்திலும் ஓடனும்!  ஏதாவது ஐடியா?
சந்தானம்:- அதுக்கு நீ ரோட்லதான் ஓடனும்.....

வாழ்க வளமுடன்!

Monday, September 20, 2010

பைக்'ல வேகமா போறவங்களா நீங்க? இது உங்களுக்குத்தான்....

பைக்'ல ஏறி உட்கார்ந்து விட்டால் பெரும்பாலோனோர் பறக்கவே விரும்புகிறார்கள். அர்ஜென்ட் அல்லது ஆர்டினரி என்றெல்லாம் இல்லை. சாதாரணமாகவே ஸ்பீடா போவதே வழக்கம். இதில் ஆண், பெண் என்ற பேதமில்லை. அதிலும் ஹெல்மெட் அணிவதையும் யாரும் விரும்புவதில்லை.

வேகமாக சென்றே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை இல்லாதபோது, நான் கொஞ்சம் நார்மல் ஸ்பீடில் செல்லுவது வழக்கம். என்னுடன் பணிபுரியும் நண்பர் எப்போதுமே மிக வேகமாகவே செல்வதே வழக்கம். அவருடன் பின்னால் உட்கார்ந்து செல்லும்போதே எனக்கு எப்போதும் ஒரு கிலியாகவே இருக்கும். அவ்வளவு வேகமாக செல்வார். நானும் சிலசமயங்களில் கொஞ்சம் மெதுவாக செல்லுமாறு சொல்வேன்.
 
திடிரென அவர் மெதுவாக செல்ல ஆரம்பித்து விட்டார். காரணம் அவர் வண்டியின் பின் டயர் மிகவும் தேய்ந்து போய் விட்டதால், மாற்றும் வரை மெதுவாக செல்வோம் என முடிவு செய்துவிட்டார். ஒரு நாள் பேச்சுவாக்கில், "சார்.. முன்பெல்லாம் என் வண்டி லிட்டருக்கு 45KM கொடுத்தது. இப்போது 65KM கொடுக்க ஆரம்பித்து விட்டது. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. எனவே இனி எப்போதும் மெதுவாகவே செல்லலாம் என முடிவு செய்துவிட்டேன்" என்றார்.
நானும் பார்த்தேன். நல்ல ஐடியாவா இருக்கே...நாமும் டெஸ்ட் பண்ணிப் பார்ப்போம் என்று 30 to 45 க்குள் செல்ல ஆரம்பித்தேன். என்ன ஆச்சரியம்?!? என் வண்டி 55KM கொடுத்துக்கொண்டிருந்தது இப்போது 70KM கொடுக்க ஆரம்பித்து விட்டது. நான் இப்போதெல்லாம் அந்த ஸ்பீடிலேயே செல்ல ஆரம்பித்துவிட்டேன்.


இதனால் என்ன நன்மை?...
1)  நீங்கள் வீட்டிலிருந்து, அலுவலகத்திற்கு செல்ல ஸ்பீடாக செல்வதற்கும், மெதுவாக செல்வதற்கும் ஒன்னும் பெரிய நேரத்தை நீங்கள் மிச்சபடுத்தி விட முடியாது. இரண்டிலிருந்து ஐந்து நிமிடம்தான் நீங்கள் சேமிக்க முடியும். ஆனால் அதைவிட உங்கள்  உயிர் முக்கியமில்லையா

2) நீங்கள் மெதுவாக செல்லும்போது வண்டி உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். குறுக்கே யார் வந்தாலும் விபத்தை பெரும்பாலும் தவிர்த்து விட முடியும்.

3) பெட்ரோல் விலை அடிக்கடி உயர்ந்து வரும் இந்நாட்களில்மெதுவாக செல்வதன் மூலம்  ஒரு மாதத்தில் எவ்வளவு பணத்தை சேமிக்க முடியும் என்று யோசித்துப் பாருங்கள்.  உங்கள் வீட்டிற்கும் நல்லது. நாட்டிற்கும் நல்லது. சுற்றுப்புற சூழ்நிலைக்கும் நல்லது.

4) ஹெல்மெட் அணியாமல் சென்றாலும், மெதுவாக செல்வதன் மூலம் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யலாம். (ஹெல்மெட் அணிவது அவசியம்  என்பதில் மாற்றுக் கருத்தில்லை.)

5) விரைவாக சென்று சேர்வது முக்கியம் என்றாலும்,   சென்று சேர வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக செல்வது
அதைவிட அவசியமில்லையா?

இப்படி பல நன்மைகள் இருக்கும் போது ஏன் நாம் வேகமாக பயணம் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டம்தான். வேகமாக வண்டி ஓட்டிப் பழகியவர்களுக்கு மெதுவாக செல்ல ஒரு மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால் கொஞ்சம் மனதை கண்ட்ரோல் செய்து மெதுவாக செல்ல ஆரம்பித்தால், பின் அதுவே பழக்கத்திற்கு வந்து விடும்.

இது ஒன்னும் அறிவுரை இல்லைங்க... என் அனுபவத்தை பகிர்ந்து கொண்டேன். சரி என படுபவர்கள் பின்பற்றி பார்த்து பயனடையுங்கள்.

வாழ்க வளமுடன்!

Monday, September 6, 2010

காமன் வெல்த்தில் களவாடப்பட்ட வெல்த்...

நண்பர் அனுப்பிய இ-மெயில், உங்களின் பார்வைக்காக இங்கே....




சரி, உலகமே இதைபார்த்து சிரிப்பா சிரிக்கிறது...

நீங்கள் கீழ் உள்ள ஜோக்கை ரசித்து சிரித்து செல்லுங்கள்....

அரசியல்வாதியின் மகன்: எங்க அப்பா இவ்வளவு மோசமா இருப்பார்னு நினைக்கலடா!
நண்பன்: ஏன்டா அப்படி சொல்ற?
அரசியல்வாதியின் மகன்: பின்ன என்னடா!  என்னோட ப்ரோக்ரெஸ் ரிப்போர்ட்'ல கையெழுத்து
போடறதுக்கு கூட காசு கேக்குறார்!

நண்பன்-1 : ச்சே! எந்த நாடு ஜெயிக்கபோகுதொன்னு  ரொம்ப டென்சனோட இன்னைக்கு க்ரிகெட் மேட்ச்  பார்த்தேன்டா!
நண்பன்-2 : அடப்பாவி! ரெண்டு நாளைக்கு முன்னாடியே எங்கிட்ட கேட்டிருந்தா சொல்லி இருப்பேனடா இந்த மேட்ச் ரிசல்டை!
நண்பன்-1 :?!?

ஐயோ தலைவரே! சொன்னா கேளுங்க! ஜெய்ச்ச அணிக்கு மட்டும்தான் கோப்பை தரமுடியும்!  தோத்த அணிக்கெல்லாம் கோப்பைய  இலவசமா தர முடியாது!


வாழ்க வளமுடன்!

Monday, August 30, 2010

உயிர் காக்க உதவுங்கள்....

இந்த செய்தி 29-08-2010 ஞாயிறு அன்று ஒரு நாளிதழில் வெளியானது. ஒரு ஏழைக் குழந்தையின் சிறு நீராக கோளாறின் பொருட்டு வரும் செப்டம்பர் 10ம் தேதி அன்று   அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் போலிருக்கிறது.  படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கி பாருங்கள்...
 போன் செய்து விசாரித்தேன்.  கலைஞர் காப்பீடு திட்டத்தை தாண்டியும் அவர்களுக்கு பண உதவி தேவைபடுவதாக அறிந்தேன். அவர்கள் கொடுத்த விளம்பரத்தில் வங்கி எண் தரவில்லை. நான்தான் கேட்டு வாங்கினேன். என்னால் முடிந்ததை அனுப்பி விட்டேன்.  வங்கி கணக்கு விபரங்களை இங்கே தருகிறேன்.

பெயர்: K. கவிதா
வங்கி எண்: 444602010105205     IFSC Code: UBIN0544469
வங்கி பெயர்: Union Bank Of India, Karur. Tamil Nadu.
 (விளம்பரத்திலும், வங்கியிலும் இந்த சிறுமியின் இன்சியல் வேறுபட்டு இருப்பதை நான் விசாரித்து தெளிவுபடுத்தி கொண்டேன். எனவே யாரும் இது சம்பந்தமாக அவர்களை கேட்டு தர்மசங்கடப்படுத்த வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.)

இதைபார்த்து யாருக்கேனும் உதவ மனம் இருந்தால் உதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இவர்கள் எனக்கு உறவினரோ அல்லது தெரிந்தவர்களோ அல்ல. எதோ இந்த பதிவில் போட்டு யாரேனும்
உதவி செய்தால் அந்த சிறுமிக்கு பேருதவியாக இருக்கும் என்ற நோக்கில் மட்டுமே இங்கே பதிவிட்டுள்ளேன்.

எல்லாம் வல்ல இறைவன் அந்த சிறுமியை காப்பாற்ற பிரார்த்திப்போம். 
வாழ்க  வளமுடன்!

Wednesday, August 25, 2010

ஒரு சாதாரணமான ஆனால் ஆழமான அர்த்தம் பொதிந்த கதை

ஒரு கல்லூரியின் முன்னால் மாணவர்கள் ஒரு சமயம், தங்கள் பேராசிரியர் ஒருவரின் வீட்டில்  ஒன்று கூடி தங்கள் கடந்த கால நிகழ்ச்சிகளை அசை போட்டு கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் தங்கள் வாழ்க்கை, வேலை மற்றும் மன அழுத்தம் சம்பந்தமாக அவர்கள் பேச்சு தொடங்கியது....

அப்போது அந்த பேராசிரியர், தன் மாணவர்களுக்காக ஒரு பெரிய பாத்திரத்தில் காபி'யும், பலவிதமான கோப்பைகளையும் எடுத்து வந்தார்.

கண்ணாடி, பிளாஸ்டிக், பூக்கள் வேலைபாடு நிறைந்த, பீங்கான், விலை உயர்ந்த  மற்றும்  சாதாரண என பல  வகை கோப்பைகளை வைத்து, காபி'யை தாங்களாகவே எடுத்துகொள்ளுமாறு கேட்டுகொண்டார்.

அனைவரின் கைகளிலும் காபி கோப்பை அவர்கள் அருந்த தயாராக இருந்தபோது பேராசிரியர் சொல்கிறார்...
"நீங்கள் ஒன்றை கவனித்தீர்களா? எல்லோருமே விலை உயர்ந்த, அழகான கோப்பைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு , சாதாரண கோப்பைகளை தவிர்த்து விட்டீர்கள். இது சாதாரணம் என்றாலும், என்ன தெரிகின்றது என்றால், எல்லோருமே சிறந்த ஒன்றை மட்டுமே எடுத்துக் கொள்ள விரும்புகிறீர்கள், இதுவே உங்கள் பிரச்சனை மற்றும் மன அழுத்தத்திற்கான காரணமாகும்".

உண்மையாக உங்களுக்கு எது வேண்டுமெனில் அந்த காபி'யே அல்லாது அந்த கோப்பைகள் அல்ல. ஆனால் நீங்கள் கோப்பைகளில்தான் அதிக கவனம் செலுத்தி, ஒவ்வொருவரும்  மற்றவர்களின் கோப்பைகள் மீதும்  உங்கள் கண்கள் செல்கிறது. இப்பொழுது, உங்கள் வாழ்க்கை காபி என்றால், உங்களின் வேலை, பணம், சமுதாயத்தில் உங்களின் நிலை இவைகள் கோப்பைகளாகும். அது உங்களின் வாழ்க்கைக்கு தேவையான ஒரு சாதாரண கருவியே அன்றி, அது உங்களின் வாழ்க்கையின் தரத்தை மாற்றிவிட முடியாது.  பல சமயங்களில், கோப்பைகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி, அதிலிருக்கும் காபியை சுவைக்க தவறி விடுகிறீர்கள்.

எனவே, அந்த கோப்பைகள் உங்களை ஆதிக்கம் செலுத்துவதை தவிருங்கள். மாறாக காபியை ரசித்து, சுவைத்து, மகிழுங்கள்.

Thursday, August 19, 2010

எஸ்.எம்.எஸ் கலாட்டா – 19-08-2010

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.

1) ஒரு பையன் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தான். ஓட்டுனர் திடிரென பிரேக்  போட்டதால் அவன் ஒரு பெண்ணின் மீது விழுந்து, முத்தமும் கொடுத்து விடுகிறான்.
கேர்ள்: டேய்! என்ன பண்ற?
பையன்: B.E. 2nd இயர் ... நீ?
நீதி: பையன்களுக்கு எப்பவுமே படிப்புதான் தெரியும்.....

2) L I V E T O G E T H E R
இதை எப்படி படித்தீர்கள்?
Live Together அல்லது
Live  To Gether அல்லது
Live To Get Her
எப்படி வேண்டுமானாலும் படித்திருக்கலாம்..
வாழ்க்கை என்பது நீங்கள் ஒவ்வொன்றையும் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்
எனபதைப் பொறுத்தது......

3) நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது  வாழ்க்கை இனிமையானது...
ஆனால் அதையும் விட சிறந்தது, இனிமையானது மற்றவர்கள் மகிழ்ச்சிக்கு நீங்கள் காரணமாக இருக்கும்போது...

4) வாழ்க்கை என்பது ஒத்திகை அல்ல.  ஒவ்வொரு நாளும் உண்மையான காட்சிகள் அடங்கியது. இங்கே ரீடேக், ரீவைண்ட்ற்கு இடமில்லை. எனவே மிகச் சிறந்த
செயல்பாட்டை அளியுங்கள் எல்லா விசயங்களிலும்...
----- ஷேக்ஸ்பியர்

5) இரயில்வேயில் வேலை....
சம்பளம்  70 ஆயிரம்...
வேலை விபரம்....
ரயிலின் முகப்பு விளக்கு பழுதாகி விட்டால்
டார்ச் விளைக்கை கையில் பிடித்துகொண்டு இரயிலின் முன்னே ஓட வேண்டும்!


6) பீலிங் கவிதை....
.....
.....
....
.....
.....
......
.....
.....
மன்னிக்கவும், பீலிங்'ல கவிதை வரல!

7) ஹலோ! அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி வருகிறது. கொஞ்சம்  கவனமாகவே இருங்கள். களிமண்ணுக்கு ரொம்பவும் டிமாண்டாக  இருக்கிறதாம். உங்கள் தலை பத்திரம். என்ன பண்றது? மனசு கேக்கல.. அதான்!
8) வெளி நாட்டிலிருந்து  பறவைகள் எல்லாம் ஏன்
பறந்து வருகிறது? தெரியுமா?
?
?
?
?
ஏன்?
?
?
?
ஏன்னா நடந்து வந்தா ரொம்ப லேட் ஆகும்.
அதனால்தான்!!
9) ஏண்டி பையன அடிக்குற?
             உங்கள கேவலமாப் பேசுறான்ங்க!
ஆமாமா! அதச் செய்யத்தான் நீ இருக்கியே?!
10) மனைவி: ஏங்க! எங்க அப்பா இன்னைக்கு வர்றதா போன் பண்ணுனாரு!
கணவன்: ஓஹோ..அதான் நேத்து என் கனவுல ஒருப் பிச்சைகாரன் நம்ம வீட்டுக்கு வர்ற மாதிரி கனவு வந்துச்சா?!?
மனைவி: அய்யய்யோ...மாத்தி சொல்லிட்டேன்க...உங்க அப்பாதான் இன்னைக்கு வர்றாரு!
கணவன்: ?!?

Tuesday, August 3, 2010

புத்தகம் வாசிக்கும்/நேசிக்கும் பழக்கம்

இப்பொழுதெல்லாம் நான் பிறந்த நாள், திருமணம் போன்ற விஷேசங்களுக்கு பரிசாக  சுய முன்னேற்ற/சிந்தனை புத்தகத்தை பரிசாக கொடுத்து வருகிறேன். என்னைப் பொறுத்தவரை  அதிக செலவு செய்து பரிசுப்பொருள் கொடுப்பதை  விட, குறைவான செலவே ஆனாலும் புத்தங்களை பரிசாக கொடுப்பதையே திருப்தியாக நினைக்கிறேன். ஏனெனில் அவர்களின் அடுத்த தலை முறைக்கும் இந்த புத்தகம் இருக்கும், பயனுள்ளதாகவே அமையும். எல்லோரும் கொடுக்கும் கடிகாரங்கள், ஓவியங்கள், சிலைகள், பாத்திரங்கள் போன்றவற்றை நீங்களும் ஏன் பரிசாக கொடுக்க வேண்டும்? அவை எல்லாமே அவர்களிடமே இருக்கும்... புத்தகம் வாசிக்கும் பழக்கம் இல்லாதவர் கூட சரி என்னதான் அந்த புத்தகத்தில் இருக்கிறது என படிக்க நினைப்பார்கள், அப்படியே அவர்களிடம் அந்த படிக்கும் பழக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதல்லாவா? 
 


பெரும்பாலும் யாரும் பாடப் புத்தககளை/வார இதழ்களை  தவிர மருந்துக்கும் கூட வேறு எந்த புத்தகத்தையும் படிப்பதில்லை.  அவர்கள் படிக்கிற பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும், இந்த பழக்கம் ஒன்றே நம்மை சிந்திக்க வைக்கும், நமது வாழ்க்கையை ஒரு நல்ல முறையில் அமைத்துக் கொள்ள வழியைக் காட்டும். எந்த சிந்தனையும், எந்த ஆராய்ச்சியும் இல்லாமல் "வெந்ததைத்  தின்று விதி வரும் போது சாவேனே"  என்று வாழ்வது  ஒரு வாழ்க்கையே இல்லை. பின் ஆறு அறிவு பெற்ற மனித வாழ்க்கைக்கும்ஐந்து அறிவு பெற்ற விலங்கு வாழ்க்கைக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?

கடமைக்கு படிக்காமல் தினம் 5, 6 பக்கம் படித்தாலும் உணர்ந்து படிக்க வேண்டும்.  படித்ததை, அதில் உள்ள நல்லவற்றை நம் வாழ்வில் முடிந்த வரை கடைப்பிடிக்க வேண்டும். குறைந்தபட்சம் கடைப்பிடிக்க முயற்சியாவது செய்ய வேண்டும். சொல்வது எளிது, ஆனால் சொல்லியதை கடைப்பிடிப்பது கடினமே... அதனால் நாம் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்தால் நாளடைவில் அதை கடைப்பிடிப்பது எளிதாகிவிடும்.

நமது பெரும்பாலான ஓய்வு நேரங்களை T.V பார்ப்பதிலேயே செலவழித்து விடுகிறோம். பின் சிந்திக்க என்ன வழி? உலக நடப்புகளை, நல்ல விசயங்களை, தகவல்களை பின் எப்படிதான் தெரிந்து கொள்வது?. ஒரே வழி, Reading habits அதாவது புத்தகம், செய்திதாள்கள்  படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது. நல்ல விசயங்களை, பழக்கங்களை சொல்வதும், செய்வதும், கேட்பதும் இந்தக் காலத்தில் கேலி செய்யப்படுகிறது, வெட்கப்பட வேண்டி இருக்கிறது, கூச்சப் பட வேண்டி இருக்கிறது. ஆனால் பெற்றோர்கள்பிள்ளைகள், சகோதர, சகோதரிகள் எல்லோர் முன்னிலையிலும் பார்க்க வெட்கப்பட வேண்டிய காட்சிகளை கொஞ்சம் கூட சங்கடமோ, கூச்சமோ இல்லாமல் T.Vயிலும், சினிமாவிலும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதாவது உண்மையில் எதற்கு வெட்கப்பட வேண்டுமோ அதற்கு வெட்கப்படாமல், நல்லவற்றை செய்வதற்கு வெட்கப்படுகிறோம் என்ன நண்பர்களேநான் சொல்வது சரிதானே?!? அதனால் அந்த கேலிக் கூச்சல்களை கண்டு கொள்ளாமல் நல்லவற்றை கடைப்பிடிக்க முயற்சிக்க வேண்டும்.

நூறு சதவீதம் யாரும் இங்கே Perfect இல்லை. எல்லோரும் தவறு செய்பவர்களே. இதில் யாரும் விதி விலக்கல்ல.  எல்லோருக்குள்ளும் மனிதமும், மிருகமும் இருக்கிறது. இதில் எதை அதிகமாக வெளியே விடுகிறோம் என்பதில் அடங்கி இருக்கிறது வாழ்க்கையின் சூட்சுமம். நாம் செல்லும் பாதை, செய்யும் செயல், பேசும் பேச்சு எல்லாம் சரியாகத்தான் சென்று கொண்டிருக்கிறதா என்பதை சிந்தனை செய்ய, யோசிக்க புத்தகம் ஒரு வழி காட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமே தேவை இல்லை. இதன் மூலமே நாம் நம்முள்ளிருக்கும் மிருகத்தைக் கொன்று, மனிதத்தை  வளர்க்க முடியும்.  இங்கே சொல்வது Bore அடிப்பது போல் இருந்தாலும் சிறிது சிந்தித்து நடந்தால் நம் வாழ்க்கை நலமாகவே/வளமாகவே அமையும் என நான் நம்புகிறேன். நீங்கள் நம்புகிறீர்களா?

சமீப காலங்களில் எல்லா விசேஷங்களிலும் எல்லா நண்பர்களுக்கும் நான் புத்தககங்களையே பரிசாகக் கொடுக்கிறேன். இதையேத்தான் இனியும் செய்யப் போகிறேன். நீங்களும் யாருக்கேனும் பரிசளிக்க விரும்பினால் இதையே செய்யலாம்,_உங்களுக்கும் இது உடன்பாடு எனில்...

இபோது கூட ஈரோடு மாநகரில் ஒரு புத்தக கண்காட்சி 30/07/2010 முதல் 10-08-2010 ஆகிய பனிரெண்டு நாட்களுக்கு நடக்கிறது. வாய்ப்பு உள்ளவர்கள் தவறாமல் சென்று வாருங்கள்.....


வாழ்க வளமுடன்!              
      

Wednesday, July 21, 2010

சிரிப்பு கார்டூன்ஸ்

சிரித்து, ரசிக்க வைக்கும் கார்டூன்கள். இது எனக்கு மெயிலில் வந்தது. ஏற்கனவே நீங்கள் சிலவற்றைப் பார்த்து இருந்தாலும், மீண்டும் பார்த்து ரசிக்க தக்கதுதான்...
(படம் பெரிதாகப் பார்க்க படத்தின் மீது க்ளிக் செய்யவும் )
















வாழ்க வளமுடன்!

Monday, July 12, 2010

மோகனச்சாரலின் காபி ஷாப் - 12-07-2010

வாருங்கள் சிறிது காபி அருந்தி, இளைப்பாறி, உற்சாகமாகச்  செல்லுங்கள்.....

*********************************************************************
தற்போது சாயம் கலந்த தேநீர் சர்வ சாதாரணமாகிவிட்டது. இதைத் தவிர்க்க கீழ்க்கண்ட விளம்பரத்தை க்ளிக் செய்து பெரிதாக்கிப் பார்த்து விழிப்புடன் இருந்து கொள்ளவும்.




**********************************************************************



**********************************************************************
ஆன்லைன் மூலமாக இப்போது உங்கள் பெயரை தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு இங்கே சென்று பார்க்கவும்.
**********************************************************************

**********************************************************************
பெட்ரோல், டீஸல் விலை உயர்வை ஒரு குடும்பம் எப்படி சமாளிக்கிறது என்று பாருங்கள்.....

**********************************************************************

**********************************************************************
கவிதை... 

* கத்தியின்றி
ரத்தமின்றி
குத்திக் கிழிக்கிறது
உன் மௌனம்!
வலி படுவதோ
என் மனம்!!

* நாம்
  இடைவெளி
  விட்டு
  நடந்தாலும்
  இணைந்தே
  நடக்கிறது
  நம்
  நிழல்கள்....
**********************************************************************

*********************************************************************
நகைச்சுவை.....
கணவன்:  (கோபமாக) நீ எவன்ட்டடி தொடர்பு வச்சுருக்க?
மனைவி: (அதிர்ச்சியுடன்) என்னங்க... இப்படி கேக்குறீங்க? நான் உங்களுக்கு துரோகம் பண்ணுவேனா?
கணவன்: அப்புறம் ஏன்டி நான் உனக்கு போன் செய்தப்ப "நீங்கள் தொடர்பு கொள்ள நினைக்கும் நபர் தற்போது வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கிறார்" என்று சொன்னார்கள்?
மனைவி: ?!?.....
-----------------------------
நாம தூங்கும்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்...
ஜன்னல் வழியா திருடன் வரலாம்..
பேன்(Fan) கழண்டு தலையில் விழலாம்...
தலையணைக்குள் தேள் இருக்கலாம்...
பெட்ஷீட்' பாம்பு இருக்கலாம்...
பக்கத்துல பேய் படுத்துருக்கலாம்...
இல்ல பேய் உங்க கால சுரண்டலாம்...
இப்படி எது வேண்டுமானாலும் நடக்கலாம்...
இருந்தாலும் நீங்க நிம்மதியா தூங்குங்க.... குட் நைட்...
(
அடப்பாவிங்களா..... எல்லாத்தையும் சொல்லி பீதியக் கெளப்பிவிட்டுட்டு  எப்படி நிம்மதியா தூங்குறது?........)
*********************************************************************


Tuesday, July 6, 2010

இட்லி Vs பொங்கல்

இது எனக்கு மெயிலில் வந்ததுங்க...இதைப் படித்துவிட்டு சிரிப்பதா அல்லது வேதனைப்படுவதா என்று தெரியவில்லை..... எதெதுக்கு கல்யாணத்துல அடிச்சுக்குறதுன்னு ஒரு விவெஸ்தையே இல்லாமப் போச்சு...
இதைப் பாருங்க.... (க்ளிக் செய்து பெரிதாக்கி காணவும்)
ஆனாலும் மாப்பிள்ளை கடமையில் கண்ணாக இருந்துருக்கிறார்.....
வாழ்க வளமுடன்!

Monday, June 21, 2010

எஸ்.எம்.எஸ்.கலாட்டா – 21-06-2010

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.

1) ஆசிரியர்: டேய்! போய் வெளியில நில்லு... அப்பத்தான் உனக்கு அறிவு வரும்!
மாணவன்: அப்ப உங்க வகுப்புல உட்கார்ந்தா அறிவு வராதுன்னு சொல்லுங்க....
ஆசிரியர்: ?!?....
2) நீங்க 95% பியுட்டி
நீங்க 96% ஸ்வீட்
நீங்க 97% நைஸ்
நீங்க 98% யூத்
நீங்க 99% ஸ்மார்ட்
ஐ....... சிரிப்பைப் பாரு....
நான் சொன்னது
100% காமெடி.

3) என்னையும், ஒன்னையும்
சேர்த்து வச்சுப் பார்க்கணும்னு ஆசையா?
கீழே வாங்க....
?
?
?
?
?
?
?
"N"  "1"
பார்த்தாச்சா? இப்ப சந்தோசமா?
இப்படித்தான் புதுசா யோசிக்கணும்.....

4) அப்பா: ஏன்டா அழற?
மகன்: அம்மா அடிச்சுட்டாங்க...
அப்பா: இதுக்கா அழற...சீ..அழாத...
மகன்: யோவ்..போய்யா... உன்னை மாதிரில்லாம்  என்னால் அடி தாங்க முடியாது.....
அப்பா: ?!?...

5) உனக்கு பேசுவதற்கும், சிரிப்பதற்கும் நேரம் இல்லை என்றால்,
நீ உன் வாழ்கையில் முன்னேறிக் கொண்டு இருக்கிறாய் என்று அர்த்தம்....
---- அலெக்ஸ்சாண்டர்.

6) நாம் எப்பவுமே நம்ம வாழ்க்கையை விட "மத்தவங்க" வாழ்க்கை நல்லாருக்குன்னு நினைக்குறோம்...
ஆனா ஒன்றை மறந்து விடுகிறோம்.... நாமும் பலருக்கு "மற்றவர்" என்பதை....
 
7) உங்கள் அருகிலுள்ள "பயம்" என்பதின் கதவை மூடிப் பாருங்கள்...
எவ்வளவு சீக்கிரமாக வெற்றியின் கதவு திறக்கிறது என்பதை.....
8) மனைவி: பாருங்க உங்க அம்மா என்னை "அரை" லூசுன்னு சொல்றாங்க...
கணவன்: சரி விடு...எப்பவுமே எங்க அம்மா உன்னை குறைச்சுத்தான் மதிப்பிடுறாங்க...

9)  மனைவி: ஏங்க இன்னைக்கு குழம்பு வைக்கட்டுமா இல்ல ரசம் வைக்கட்டுமா?
கணவன்:  முதல்ல எதாவது ஒன்னு வை... அப்பறமா அதுக்கு பேரு வச்சுக்கலாம்!....
10)        என்னங்க இந்த TV'ல கோடு கோடா தெரியுது...

                நீங்க வாங்கும் போதே அன்ரூல்டு  TV ன்னு கேட்டு வாங்கி இருக்கணும்!

11) மனைவி: ஏங்க பக்கத்துக்கு வீட்டு பெண் கட்டி இருக்குற சேலை ரொம்ப நல்லா இருக்குங்க!
கணவன்:  அப்பாடி! கல்யாணம் ஆகி இந்த 5 வருஷத்துல இப்பதான் என்னோட செலெக்க்ஷன நீ பாராட்டி இருக்க!

/
/கலக்கல் தொடரும்.
/