Tuesday, February 16, 2010

எஸ்.எம்.எஸ் கலாட்டா – 16-02-2010

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.



1) YOU = Very Nice
YOU = Very Smart
YOU = Very Lovely
YOU = Very Lucky
YOU = Very Beauty
ஐ.... சிரிப்பைப் பாரு.... இது எனக்கு வந்த SMS....

2) ஒரு சிறுவன் தன் அம்மாவிடம் அடி வாங்கிக் கொண்டு கோபமுடன் வெளியில் அமர்ந்துள்ளான். அப்போது வந்த அப்பா அவனிடம், ஏன் கோபமாக இங்கே உட்கார்ந்துள்ளாய் எனக் கேட்கிறார். மகன் சொல்கிறான்....
" அப்பா... இனியும் என்னால் உன் மனைவியிடம் ஒத்துப் போக முடியாது... எனக்கென ஒரு மனைவியைக் கொடு"...

3) ஒரு கவிதை...
திரும்பி...
திரும்பி
பார்க்க வைத்தது...
அவளின்
திரும்பாத முகம்...
ஆனால்...
அவள் திரும்பியதும்
மாறியது
என் முகம்...
ஏனெனில்
சப்பை பிகர் மா......

4) டார்லிங்... எங்க அப்பா உங்கள வீட்டோட மாப்ளையா இருக்க சொல்றாரு....
சரி... சரி... உன் அப்பனுக்காக இல்லாட்டிலும் உன் தங்கைக்காக இருக்கேன்டா செல்லம்....

5) நான் உங்களிடம் ஒரு கல் கேட்டேன்....
ஒரு சிலையே கொடுத்தீர்கள்..
ஒரு இலை கேட்டேன்.. ஒரு மலரையே கொடுத்தீர்கள்...
என் கண்ணீரை துடைக்க ஒரு கைகுட்டைக் கேட்டேன்... நீங்களோ உங்கள் கையைக் கொடுத்தீர்கள்...
உண்மையாகவே நீங்கள் ஒரு செவிடு.......

6) ஆசிரியர்: நமது நாட்டின் தேசிய விலங்கு எது?
மாணவன்: புலி உறுமுது...
ஆ: தேசிய மலர்?
மா: ஒரு சின்ன தாமரை...
ஆ: ஒரு சோழ மன்னனின் பெயர்?
மா: கரிகாலன் கால போல...
ஆசிரியர் அடிக்கிறார்...
மா: என் உச்சி மண்டைல சுர்ருங்குது....

7) கேர்ள்: எக்ஸாம் டைம்'ல நாங்க டி.வீ, ரேடியோ, கம்ப்யூட்டர், செல்போன் தொடவே மாட்டோம்...
பாய்: இவ்வளவு தானா? நாங்க புக்கையே தொட மாட்டோம்...

8) பாய்: இன்னிக்கு நைட் நாம ஊர விட்டு ஓடிப் பொய் விடலாம்...
கேர்ள்: எனக்கு தனியா வர பயமா இருக்கு....
பாய்: அப்ப உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வா...
கேர்ள்: ?!?....

9) கருப்பும் ஒரு கலர்...
வெள்ளையும் ஒரு கலர்...
ஆனால் ப்ளாக் & வொய்ட் டி.வீ. என்பது ஒரு கலர் டி.வீ. இல்ல....
என்ன கொடும சார் இது.......

10) நபர் - 1: இந்த மொபைல் நல்லாருக்கே...எங்க வாங்கின?...
நபர் - 2: ஓட்டப் பந்தயத்தில் இதை வாங்கினேன்...
நபர் - 1: எத்தனை பேர் கலந்து கொண்டார்கள்?
நபர் - 2: மூன்று பேர்.... இந்த மொபைல் ஓனர், ஒரு போலீஸ் மற்றும் நான்....

---- திருடிட்டு வந்த நாய் எப்படி சமாளிக்குதுன்னு பாருங்க மக்களே....

11) ஒரு கல்லூரி வாட்ச்மேனிடம், பெற்றோர்கள்: "இந்த காலேஜ் எப்படி? நல்ல காலேஜ் தானே? "
வாட்ச்மேன்: "அப்படித்தான் நினைக்கிறேன். இங்குதான் நான் இன்ஜினியரிங் டிகிரி முடித்தேன்.. உடனடியாக எனக்கு வேலை கிடைத்துவிட்டது"
பெற்றோர்கள்: ?!?.....

12) ஹார்ட் அட்டாக்'னா என்ன?
பஸ் ஸ்டாப்'ல ஒரு சூப்பர் பிகர் உன்னையே லுக் விடும்... உனக்கு படபடப்பா இருக்கும்.. அது உன்ன பார்த்து சிரிக்கும்.. உனக்கு கை கால் லேசா நடுங்கும்... அது உன் பக்கத்துல வரும்... உனக்கு வியர்த்து கொட்டும்... அவ தன்னோட அழகான லிப்ஸ்'ஐ ஓபன் பண்ணி ''இந்த லவ் லெட்டர்'ஐ உங்க நண்பர் (நான்தான்!) கிட்ட கொடுத்துடுங்க"ன்னு சொல்லும்போது உங்க இதயத்துல டொம்முன்னு ஒரு சத்தம் கேக்கும் பாரு...
அது தான் மச்சி ஹார்ட் அட்டாக்.......

13) வாஸ்கொடாகாமா இப்போது உயிருடன் இருந்தா அவர் பெயர் என்னத் தெரியுமா?
இஸ்கொடாகாமா... ஏன்னா "WAS " இறந்த காலம்... "IS " நிகழ் காலம்....
எங்களுக்கும் இங்கிலீஷ் லிடேரச்சர் தெரியும்ல.... எப்பூடி......

14) எல்லா பிகர்'யும் பாக்க நினைப்பது பாய்ஸ் மென்டாலிட்டி.. ஆனா எல்லா பாய்ஸ்'ம் தன்ன மட்டுமே பாக்கனும்னு நினைப்பது கேர்ள்'ஸ் மென்டாலிட்டி.. So, Boys are Genius.... Girls are Selfish....


15) காதலன்: ஒரே ஒரு முத்தம் கொடு....
காதலி: கல்யாணத்துக்கு அப்புறம்தான் நீங்க என்னத் தொட முடியும்...
காதலன்: சரி... கல்யாணம் முடிந்ததும் மறக்காம எனக்கு சொல்லி அனுப்பு....
காதலி: ?!?........

16) நண்பர் - 1: தொட்டதக்கெல்லாம் என் மனைவி கோவிச்சுகுரா...
நண்பர் - 2: அப்படி நீ என்னத்த தொட்ட?
நண்பர் - 1: அவளோட தங்கச்சியைத்தான்....
நண்பர் - 2: ?!?..............

17) சூப்பர் பஞ்ச் டயலாக்...
நான் நல்லவன்னு சொல்லி ஊரை ஏமாத்த நான் ஒன்னும் கெட்டவன் இல்ல...
நான் கெட்டவன்னு உண்மையை ஒத்துக்க நான் ஒன்னும் நல்லவன் இல்ல...
---------- நான் அவன் இல்லை....

18) குழந்தை: அம்மா... காந்தி செத்துட்டாரா?
அம்மா: ஆமா செல்லம்.....
குழந்தை: நேரு?
அம்மா: அவரும் போய்ட்டாருடா....
குழந்தை: அறிஞர் அண்ணா?...
அம்மா: அவரும் போய் சேந்துட்டாருடா......
குழந்தை: அப்ப நாட்டுல நல்லவங்களே இல்லையாமா?....
அம்மா: கவலை படாதே செல்லம்... இந்த தமிழ் நாட்டுல "மோகனச்சாரல்" ன்னு ஒருத்தர் ப்ளாக் எழுதிகிட்டு இருக்கார்... அவுங்க போதும் இந்த நாட்டுக்கு.....

19) கர்நாடகா தண்ணீரும், கேர்ள்'சின் கண்ணீரும் ஒண்ணுதான்... ரெண்டுமே கொஞ்சமாத்தான் வரும்... ஆனா பல பிரச்சனைய கொண்டு வரும்..
----- வாட்டர் டேன்க் மேல படுத்து யோசிப்போர் சங்கம்.....

20) பெஸ்ட் கவிதை in 2010 :
உன்னை யாரும்
காதலிக்கவில்லை
என்று கவலைப்பட வேண்டாம்...
அது
உன் வருங்கால
மனைவியின்
வேண்டுதலாகக் கூட
இருக்கலாம்............
(ஹையோ....ஹையோ.... பிகர் மாட்டாததுக்கு எப்புடியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு......)

கலக்கல் தொடரும்...
/
/
/

Monday, February 8, 2010

எஸ்.எம்.எஸ் கலாட்டா – 08-02-2010

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.



1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....

2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?

3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.

4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....

5) நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....

6) மூன்று மொக்கைகள்: a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?
b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?
c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட முடியுமா?

7) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது?....

8) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....

9) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்...

10) நான் ஒன்னு சொல்லுவேன்... எழுந்திருச்சு ஓடக்கூடாது...
சொல்லட்டுமா?
பெருமாள் கோவில்'ல சுண்டல் போடுறாங்க...
ஹே...ஹே.. நில்லுங்க... எங்க ஓடுறீங்க?....

11) True GK Facts:
** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.
** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.
** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.
** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது?.....




12) ஜனவரி - 14 க்கும், பிப்ரவரி - 14 க்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி - 14 !
அதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி - 14 !!

13) மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது?

14) உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!
1. சிரிப்பு
2. அழகு
3. நல்ல டைப்
4. கொழந்த மனசு...
5. இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....

15) அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.

16) முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....
முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....

17) தத்துவம் 2010
"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!
இதெல்லாம் ஒரு மெசேஜ்'ன்னு படிக்குற நீங்க ஒரு "-------" ஆமாங்க.. அதான்... அதேதான்....

18) கணவன்: எனக்கு கால் வந்த நான் வீட்ல இல்லன்னு சொல்லு!
கொஞ்ச நேரம் கழித்து மொபைலில் கால் வருகிறது...
மனைவி: ஹலோ! என் கணவர் வீட்ல தான் இருக்கார்!
கணவன்: ஏண்டி அப்படி சொன்ன?
மனைவி: அது என்னோட லவர்!
கணவன்: ?!?.....

19) அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்'ல லைட்டே எரியல?
மகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா!

20) எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா??? ?
?
?
?
?
?
?
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4 4
நல்லா பார்த்துக்குங்க... எல்லா "நாளும்" ஒரே மாதிரி இருக்கா?...........
அப்புறம் மீட் பண்றேன்.....

Wednesday, February 3, 2010

மோகனச்சாரலின் காபி ஷாப் - 03-02 -2010

இன்று முதல் உங்களின் நல் ஆதரவுடன் இந்த காபி ஷாப்'ஐ தொடங்குகிறேன். அவ்வப்போது வந்து காபி அருந்திவிட்டு சிறிது இளைப்பாறி செல்லுங்கள்! உங்களின் ஆசியுடனும், ஆதரவுடனும் கடை களை கட்டும் என்று நம்புகிறேன்!

**************************************************
நம் மகாத்மா காந்தியைப் பற்றி ஒரு சுவாரசியமான தகவலை சமீபத்தில் அறிந்தேன். ஆங்கிலேயர்களின் துப்பாக்கி, தோட்டாக்கள், பீரங்கிகள் என அனைத்திற்கும் பயப்படாமல் இருந்தவருக்கு ஒரே ஒரு விஷயத்திற்கு மட்டும் மிகவும் பயந்திருக்கிறார். ஆமாங்க... அவருக்கு இருட்டு என்றால் மிகவும் பயமாம். இரவில் தூங்கும் பொது கூட விளக்கை போட்டு கொண்டுதான் தூங்குவாராம். ஆச்சரியமாக இருக்குதானே?....
**************************************************

**************************************************
இந்த பிப்ரவரி 2010 மாதத்துல ஒரு விசேஷங்க... கொஞ்சம் காலேண்டர பாருங்களேன்... இப்ப எதாவது புலப்பட்டதா?.... நல்லாப் பாருங்க... ஆமாங்க... ஒவ்வொரு கிழமையும் சரியாக நான்கு நான்கு தேதிகளில் வரும். இப்ப மறுபடியும் மாத காலேண்டர பாருங்க... என்ன சரிதானே?..... லீப் வருடங்கள் தவிர மற்ற வருடங்களில் இது மாதிரி வரும்....
*************************************************

************************************************
மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து 400 ரூபாய் ஆதரவற்ற விதவைகளுக்கும், முதியோர்களுக்கும் மாதம் தோறும் வழங்கி வருகிறது. இவை அனைத்தும் மணி ஆர்டர் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. நல்ல விசயம்தானே... என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. ஆனால் இந்த போஸ்ட்மென் என்ன செய்கிறார் என்றால் 400 ரூபாயில் 40 ரூபாய் எடுத்துக்கொண்டு 360 ரூபாய்தான் கொடுக்கிறார். அதாவது 10 % கமிஷன். ஏற்கனவே தபால் துறைக்கு அரசு மூலம் கமிஷன் செலுத்தப்பட்டு விடுகிறது. ஆதரவற்ற விதவை, முதியோரிடம் இருந்து ஈவு, இரக்கம் இல்லாமல் பிச்சை எடுக்கும் இந்த ஜென்மங்களை என்னவென்று சொல்வது?....
************************************************

**************************************************
சாதரணமாக விண்டோஸ் மெசினில், ஒன்றுக்கும் மேற்ப்பட்ட கோப்புகளை செலக்ட் செய்து, ரைட் கிளிக் செய்து ப்ரோபெர்ட்டிஸ் சென்று பார்த்தால் அந்த கோப்புகள் அல்லது போல்டர்களின் அளவு மற்ற பிற விசயங்களை தெரிந்து கொள்ளலாம், இதில் ஒரே ஒரு விண்டோஸ் மட்டுமே ஓபன் ஆகும். இதுவே கன்ட்ரோல் பேனல் உள்ளவற்றில் உதாரணமாக பான்ட்ஸ் (Fonts ) சென்று நீங்கள் இது மாதிரி ஒன்றுக்கும் மேற்ப்பட்டவற்றை செலக்ட் செய்து, ரைட் கிளிக் செய்து ப்ரோபெர்ட்டிஸ் சென்று பார்த்தால் நீங்கள் எத்தனை கோப்புகளை செலக்ட் செய்து இருக்கிறீர்களோ அத்தனை விண்டோஸ் ஓபன் ஆகி விடும். உதாரணமாக உங்கள் Fonts போல்டரில் 100 fonts இருந்து நீங்கள் எல்லாவற்றையும் செலக்ட் செய்து ப்ரோபெர்ட்டிஸ் கிளிக் செய்து விடாதீர்கள், ஏனெனில் 100 விண்டோஸ் ஓபன் ஆகி விடும்.
******************************************************

******************************************************
நகைச்சுவை.....
வடிவேல்: என்ன இது 601 ரூபாய் கடன் வாங்கிவிட்டு வெறும் 106 ரூபாய் மட்டும் தருகிறாய்?
பார்த்திபன்: இதுதான் வாங்கிய கடனை திருப்பி தருவது என்பது....
வடிவேல்: ?!?....
----------
LKG பையன்-1: டேய் மச்சான்... எக்ஸாம்'க்கு பிட் எடுத்துட்டுப் போனியே...என்னாச்சு?
LKG பையன்-2: அத ஏன்டா கேக்குற... பிட்'ஐ ஜட்டிக்குள்ள வச்சுட்டுப் போனேன். வழக்கம் போல ஜட்டியிலேயே உச்சாப் போயிட்டேன்............
*******************************************************

Monday, February 1, 2010

எஸ்.எம்.எஸ் கலாட்டா – 01-02-2010

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.



1) என்னைக் கடித்த கொசுவைப் பிடித்தேன். அடிக்கவில்லை. விட்டு விட்டேன். ஏன்னா, பயபுள்ள அது உடம்புல ஓடறது நம்ம ரத்தம்லா...

2) பேச்சில் இனிமை, இதயத்தில் தூய்மை, கண்ணில் வலிமை, முகத்தில் பொலிவு.......
ஒரு காலை வணக்கம் சொல்ல 4 பொய் சொல்ல வேண்டி இருக்கிறது.

3) அய்யாச்சாமி: என்னுடைய பையில் என்ன இருக்கிறது என்று சொன்னால், என் பையிலிருந்து சில முட்டைகளை தருவேன். எத்தனை இருக்கிறது என்று சொன்னால், என் பையிலுள்ள 8 முட்டைகளையுமே கொடுத்து விடுவேன்.
ஜூனியர் அய்யாச்சாமி: ஏதாவது க்ளு கொடுங்கள்.

4) “செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..
“படி.. அல்லது பன்னி மெய்...” --- எங்க பிதாஜி....

5) ஆசிரியர்: எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்: புரியல சார்...


6) போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.

7) மகன்: அப்பா! ஓவரா என்னை பக்கத்து வீட்டுப் பொண்ணோட கம்பேர் பண்ணிகிட்டு இருப்பியே... இப்ப பாரு... அவ 470 மார்க்.. நான் 480... மார்க்.
அப்பா: சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா

8) அய்யாச்சாமி: சார்.. என்னுடைய மொபைல் பில் எவ்வளவு?
கஸ்டமர் கேர்: சார்.. ஜஸ்ட் 123 என்ற நம்பருக்கு போன் செஞ்சீங்கனா கரண்ட் (current) பில் தொகை தெரியவரும்....
அய்யாச்சாமி: ஹே... முட்டாள்... எனக்கு கரண்ட் பில் வேண்டாம்... மொபைல் பில்தான் வேண்டும்....

9) மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லி கொடுக்கிறாள்.
மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense)
கணவன்: அது ஒரு இறந்த காலம்....

10) மனசு இருந்தா “SMS” பண்ணுங்க...
அன்பு இருந்தா “Picture Message” அனுப்புங்க..
காசு இருந்தா “Call” பண்ணுங்க..
இது எல்லாமே இருந்தா ஒங்க “செல்”ல கொரியர்’ல அனுப்புங்க....

11) தேர்வு அறையில்...
மாணவன்: ஆல் தி பெஸ்ட்!
மாணவி: ஆல் தி பெஸ்ட்!
மாணவன் பெயில்.... மாணவி 80%
நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....
(ஒழுங்கா படிக்க முடியாததுக்கு என்னமா சமாளிக்கிறான்னு பாருங்க....)

12) நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்கு பெவிகால் எடுத்துட்டுப் போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப் போச்சாம்..
நாட்டாமை: என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..

13) முடியாது என்று சொல்பவன் முட்டாள்...
முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?

14) லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?
லவ் லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்பூடி?

15) அரிசிப் புட்டு, கொலாப் புட்டு, கோதுமைப் புட்டு இதை எல்லாம் சாப்பிடலாம்..ஆனால் இன்புட்...அவுட்புட்... இதை சாப்பிட முடியுமா?
----- லேப் அவர்’ல அவுட்புட் வராம பீல் பண்ணுவோர் சங்கம்...

16) கணவன்: காலெண்டர்’ல என்னப் பாக்குற?
மனைவி: பல்லி விழும் பலன்...
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அது சரி... பல்லி எங்க விழுந்தது?
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...

17) சைன்டிஸ்ட் எல்லாம் சொர்க்கத்தில கண்ணாமூச்சி விளையாடிட்டு இருக்காங்க.. நம்ம ஐன்ஸ்டீன் கண்டு பிடிப்பவர்... ஆனால் நியூட்டன் ஒளிந்து கொள்ளாமல் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறார்.....
ஐன்ஸ்டீன்: நியூட்டனைக் கண்டுபிடித்து விட்டேன்....
நியூட்டன்: இல்லை... தவறு... நான் நியூட்டன் இல்லை.. நான் ஒரு மீட்டர் சதுரத்தில் நிற்கிறேன்.. நான் நியூட்டன்/மீட்டர்.. எனவே நான் இப்போது பாஸ்கல்....
ஐன்ஸ்டீன்: ராஸ்கல்... என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு....?

18) நம்ம அய்யாச்சாமி நடு ஆற்றில் படகில் போய்க கொண்டிருக்கிறார்... அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப் பார்த்து அதில் என்ன எழுதி இருக்கிறது என்று படிக்க முயல்கிறார். ஆனால் அவரால் படிக்க முடியவில்லை... எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்று படிக்கிறார்...
“இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.”

19) நம்ம சூப்பர் ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும்?
* நான் ஆபிசுக்கு லேட்’டா வந்தாலும் லேட்டஸ்ட் சாப்ட்வேரோடத்தான் வருவேன்...
* J to the A to the V to the A --- JAVA
* கண்ணா... வைரஸ் தான் கூட்டமா வரும். ஆண்ட்டி வைரஸ் சிங்கில்’லாத்தான் வரும்.
* C க்கு அப்புறம் C++... எனக்கு அப்புறம் NO++
* நான் பாக்குறதுக்குதான் ஹார்ட்வேர் மாதிரி.. ஆனா என் மனசு சாப்ட்வேர் மாதிரி...

20) வாழ்கையின் முக்கிய ஏழு நிலைகள்.(Stages)
1. படிப்பு
2. விளையாட்டு
3. பொழுது போக்கு
4. காதல்
5.
6.
7.
ஹலோ... என்ன தேடுறீங்க? காதல் வந்த பிறகுதான் எல்லாமே நாசமாப் போயிருமே...?