Wednesday, March 31, 2010

கணினியின் கீபோர்டில் ஒரு மேஜிக்....

உங்கள் கம்ப்யூட்டரில் F0 மற்றும் F13 கீகளை அழுத்தினால் என்ன வருகிறது என்று பாருங்களேன்....

?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
என்னது? F0 மற்றும் F13 கீகளை காணோமா? சரி விடுங்க பாஸ்!
அந்த கீகள் கீ போர்டிலேயே இல்லாவிட்டால் நாம் என்ன செய்வது?
ம்ம்...அப்புறம் இன்னைக்கு என்ன தேதிங்க?
ஏப்ரல் - 1....தானே...
டென்ஷன் ஆகவேண்டாம்! ஒரு ஜாலிக்குதான்!
மீண்டும் சந்திப்போம்........
/

Monday, March 29, 2010

எஸ்.எம்.எஸ்.கலாட்டா – 29-03-2010

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.



1) அப்பா: பக்கத்து வீட்டுப் பொண்ணு எவ்வளவு மார்க் வாங்கி இருக்கா..... அவளப் பார்த்தாவது நல்லா படிடா....

மகன்: அய்யோ...அய்யோ... அவளப் பார்த்து பார்த்துத்தான் நான் படிக்காமலேப் போயட்டேன்ப்பா....

---- பிகர் பின்னாலே சுத்தி பெயில் ஆனோர் சங்கம்....

2) பையன்கள் லவ்வை சொல்லும்போது, கேர்ள்ஸ் சொல்லும் டாப் 10 வார்த்தைகள்...

1. நோ ஐடியா..

2. ப்ரண்ட்ஸ்’ஸா இருக்கலாம்...

3. செருப்பு பிஞ்சிடும்..

4. ஐ ஹேட் லவ்...

5. ஐ ஹேட் யு...

6. பேரன்ட்ஸ் திட்டுவாங்க...

7. லவ்’ல நம்பிக்கை இல்ல...

8. யோசிக்க டைம் வேணும்...

9. உன்னோட மந்த்லி இன்கம் என்ன?

10. சாரி... நான் இன்னொருத்தர லவ் பண்றேன்...

----- ங்கொய்யால....ரூம் போட்டு யோசிச்சுருப்பானுங்களோ?!????



3) வடிவேல்: ஹாய் உங்க டிரஸ் நல்லாருக்கு... பொங்கலுக்கு எடுத்ததா?

பார்த்திபன்: இல்ல...

வடிவேல்: அப்புறம்?

பார்த்திபன்: எனக்கு எடுத்தது...

வடிவேல்: ?!?



4) ஆயிரமாயிரம் வருடங்கள் போய் விட்டது..

மில்லியன் கணக்கில் தியரம் சால்வ் செய்தாகிவிட்டது...

கோடிக்கணக்கில் பார்முலா கண்டுபிடித்தாகிவிட்டது...

ஆனாலும் இன்னும் X is Unknown...

இதுதாங்க வாழ்க்கை....



5) தமிழ்நாடு போலீஸ் ஸ்ட்ரெண்க்த்....

DGP – 5

Asst. DGP – 23

IG – 23

DIG – 38

SP – 98

DSP – 482

Inspector – 2167

SI – 4741

Others – 87900

Total – 95477...

இத்தன போலீஸ் இருந்தும் இந்த பொண்ணுங்க எப்படித்தான் என் இதயத்தை திருடுராங்களோ? தெரியலையே.....



6) ஒரு நல்ல செய்தி... நாளை மட்டும் இந்தியா முழுவதும்

BSNL TO BSNL

AIRTEL TO AIRTEL

VODOFONE TO VODOFONE

AIRCEL TO AIRCEL

Totally Free........

>

>

>

ஒரு கெட்ட செய்தி...

அது மிஸ்டு காலுக்கு மட்டும்தான் பொருந்தும்....



7) நோயாளி: டாக்டர் என்ன இப்படிப் பண்ணீட்டிங்க... கிட்னி’ல கல் எடுக்க சொன்ன கிட்னியவே எடுத்துடீங்க....

டாக்டர்: மறுபடியும் கல் வரக்கூடாது பாருங்க....



8) ஏன் அம்மா மட்டும் ஒவ்வொருத்தருக்கும் மிகவும் ஸ்பெஷல்? வாங்கப் பார்ப்போம்.....

ஒரு நாள் மழையில் நனைந்து கொண்டே வீட்டுக்கு வந்தேன்...

சகோதரன் கேட்கிறான் “ஏன் நீ குடை எடுத்துக் கொண்டுப் போகவில்லை?”

சகோதரியின் அறிவுரை “ஏன் மழை விடும் வரை காத்திருக்க வேண்டியதுதானே?”

அப்பா கோபமாக “ சளி, காய்ச்சல் வந்த பிறகுதான் உனக்கு புத்தி வரும்.”..

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்......

அம்மா என் தலையை துவட்டிக்கொண்டே “நாசமாப் போன மழை... என் பிள்ளை வீட்டுக்கு வரும் வரைப் பொறுத்திருக்க கூடாதோ?”.... இதுதாங்க அம்மா....



9) தாத்தா: பேராண்டி.. போய் ஒளிந்துகொள்... உன் வாத்தியார் வருகிறார்... நீ இன்று கிளாஸ் கட் அடித்து விட்டாய்...

பேரன்: தாத்தா.. நீங்க முதல்ல போய் ஒளிந்து கொள்ளுங்க... நீங்க செத்துப் போயிட்டதா சொல்லித்தான் நான் இன்னைக்கி லீவ் போட்ருக்கேன்....



10) சாலையில்.. ஒரு பெண்: ஸ்டுபிட்...இடியட்...நீ பைக்’ல வந்த ஸ்பீட்’ல என் மேல மோதி இருந்தா என்ன ஆகி இருக்கும்?

பையன்: நீ இவ்ளோ பேசி இருக்க மாட்ட!...



11) ஆசிரியர் போனில்: நீங்க செத்துப் போயிட்டதா சொல்லித்தான் இன்னிக்கு லீவ் போட்டன உங்க பையன்...

அப்பா: அடப்பாவி! நீங்க செத்துப் போயட்டாதனாலத்தான் இன்னிக்கி ஸ்கூல் லீவ்’ன்னு சொல்லி மட்டம் போட்டான்...



12) 6 முக்கியமான விஷயங்கள்...

1st..உங்கள் நாக்கால் உங்களின் எல்லா பற்களையும் தொட முடியாது..

2nd..இதப் படிச்சதும் எல்லா முட்டாள்களும் இதை செய்ய முயற்சி செய்வாங்க..

3rd..இப்ப நீங்க சிரிப்பீங்க...ஏன்னா நீங்க முட்டளாகிடீங்க...

4th...இப்ப நீங்க உங்க நண்பர்களை முட்டாளாக்க நினைப்பீங்க..

5th...இப்ப நீங்க உங்க எல்லா நண்பர்களுக்கும் இதை போர்வர்ட் செய்வீங்க...

6th...முதலாவதா சொன்னது பொய்......



13) சூப்பர், ஆபர் இது ரெண்டுக்கும் உள்ள வித்தியாசம்....

அன்பான மனைவி இருந்தா அது சூப்பர்...

அதே அவளுக்கு அழகான தங்கச்சி இருந்தா அது ஆபர்...



14) எல்லா எறும்புகளும் ஒரு சைக்கிள் ரேசில் கலந்துகொண்டன. திடீரென்று ஒரு யானை குறுக்கே புகுந்து விட்டது. அப்போது ஒரு எறும்பு சொல்கிறது... “வீட்ல சொல்லிட்டு வந்திட்டியாடா குண்டா?”...



15) ஒரு டிபிகல் இன்ஜினியரிங் கொஸ்டின்...

வாட் இஸ் தி சொல்யூசன் பார் 2+2?

A) 4

B) FOUR

C) IV

D) 4.0

இப்ப தெரியுதா? ஏன் ஸ்டுடன்ஸ் அரியர் வக்கிராங்கன்னு....



16) வடிவேல்: தம்பி! நீங்க எதோ மெசேஜ் எல்லாம் நல்லா அனுப்புரீங்கன்னு சொன்னாங்க... என்ன கார்ட் நீங்க போட்டுருக்கீங்க? ஏர்செல்’லா?

பார்த்திபன்: இல்ல!

வடிவேல்: ஏர்டெல்’லா?

பார்த்திபன்: இல்ல!

வடிவேல்: வோடோபோன், பீ.எஸ்.என்.எல்’ன்னு ஏதாவது கார்டா?

பார்த்திபன்: இல்ல!

வடிவேல்: அப்ப என்ன கார்டுதான் போட்டுருக்கீங்க?

பார்த்திபன்: சிம்கார்ட்...

வடிவேல்: ?!?



17) பூவுக்குள்... தேன்.

நெல்லுக்குள்... அரிசி.

கடலுக்குள்....முத்து.

மண்ணுக்குள்....வைரம்.

உன் மனச தொட்டு சொல்லு.....

உன் மண்டைக்குள் களிமண் தானே?



18) நாம வெளிலே போகும்போது பூனை குறுக்கே போனுச்சுன்னா அதுக்கு என்ன அர்த்தம்?

?

?

?

?

பூனையும் எங்கியோ வெளிய போகுதுன்னு அர்த்தம்.



19) நபர்-1: “பஸ் ஸ்டாப்’ல நின்னுக்கிட்டு மேல பார்த்துக்கிட்டு இருக்கீங்களே... ஏன்?”

நபர்-2: “மதுரை போற பஸ் 2 மணிக்கு மேல வரும்ன்னு சொன்னாங்க..அதுதான்”



20) அப்பா: செல்லம்! எங்க.. A B C D சொல்லு பார்ப்போம்...

மகன்: சரிப்பா! A E G H I J K L M N O P Q R S T U V W X Y Z

அப்பா: எங்க B F C D?

மகன்: அப்பா! அது என் ஸ்கூல் பேக்’ல இருக்கு!

/
/கலக்கல் தொடரும்.
/

Tuesday, March 23, 2010

கார்பரேட் உலகின் சுயநலம்

நண்பர் இ-மெயிலில் அனுப்பியது.... கார்பரேட் உலகின் சுயநலத்தை தோலுரித்துக்காட்டும்..... 
எளிமையான ஆங்கிலத்தில் இருப்பதால் மொழிபெயர்ப்பு தேவை இல்லை என நம்புகிறேன்....


Monday, March 15, 2010

எஸ்.எம்.எஸ்.கலாட்டா – 15-03-2010

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.

1) மாணவர்களின் வளர்ச்சி... ஒரு பார்வை....
1 – 3rd Std.: தினமும் படிக்கிறேண்டா...
4th – 6th: கொஞ்சம் கஷ்டம்டா...
7th – 9th: முக்கியமான கொஸ்டின் மட்டும்தான் படிக்கிறேண்டா...
10th - +2: மைக்ரோ செராக்ஸ் எடுதுக்கலாமடா மச்சான்?
UG: இன்னிக்கு என்ன எக்ஸாம்’டா?
PG: என்னடா சொல்ற... இன்னிக்கு எக்ஸாமா? சொல்லவே இல்ல.....

2) I
I L
I LO
I LOV
I LOVE
I LOVE Y
I LOVE YO
I LOVE YOGA
இது உடம்புக்கு நல்லது.... நீயும் ட்ரை பண்ணிப் பாரு.. ஓகே.வா...

3) ஆசிரியர் – 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க?
ஆசிரியர் – 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல்றான்...

4) உன் புத்தகத்தின்
முதல் பக்கத்தில்
ஒரு கவிதைப்
பார்த்தேன்...
பிறகுதான் சொன்னார்கள்
அது
உன் பெயர் என்று...
---- மனசாட்சி இல்லாமல் பொய் சொல்வோர் சங்கம்.

5) ஏப்ரல் முதல் தேதி அன்று அய்யாசாமி ஒரு பஸ்ஸில் ஏறினார். கண்டக்டர் டிக்கெட் வாங்க சொல்ல, பத்து ரூபாய்க்கு டிக்கெட் வாங்கினார்...
பின் கண்டக்டரைப் பார்த்து சத்தமாக “ ஹே ஏப்ரல் பூல்! என்னிடம் பஸ் பாஸ் இருக்கே!?” என்றார்..

6) கேர்ள்: டேய்.. எனக்கு எந்த மெசேஜ்’ம் போர்வர்ட் செய்யாதே...
பாய்: சாரி... உன் நம்பர என்னோட ப்ரண்ட்ஸ் லிஸ்ட்’ல சேர்த்துட்டேன்.. தப்பா எடுத்துக்காதே...
கொஞ்ச நாள் கழித்து.....
கேர்ள்: ஐ லவ் யு...
பாய்: வாட்?....
கேர்ள்: சாரி...உன் நம்பர என்னோட லவ்வர் லிஸ்ட்’ல சேர்த்துட்டேன்.. தப்பா எடுத்துக்காதே...
பாய்: ?!?

7) பெண் – 1: அக்கா இன்னைக்கு என் புருஷன் ஊருக்கு போறாரு... இன்னைக்கு ராத்திரி மட்டும் என் கூட துணைக்கு படுங்களேன்...
பெண் – 2: அடிப் போடி...உனக்கும் உன் புருஷனுக்கும் வேற வேல இல்ல! யார் ஊருக்கு போனாலும் என்னையே கூப்பிடுறீங்க!!

8) வாழ்க்கை நமக்கு எவ்வளவோ பாடங்கள் கற்று தருகிறது.. ஒரு புகழ்வாய்ந்த சீன கவிஞர் சொல்கிறார்...” சிங்க்லியோ சுவா சொன்கலோமா ச்யோன சுங் உணா செவோல்”
உண்மையிலேயே மனசை தொடும் வரிகள்தானே!...
நான் இதை படித்துவிட்டு அழுதே விட்டேன்!.....

9) ஆசிரியர்: போய் சிலபஸ் வாங்கிட்டு வாடா!
கொஞ்ச நேரம் கழித்து மாணவன் வெறும் கையுடன் வருகிறான்...
மாணவன்: சார்..
சிட்டிபஸ்..
ஏர்பஸ்...
டவுன்பஸ்...
எக்ஸ்பிரஸ் பஸ்...
பாயிண்ட்-பாயிண்ட் பஸ்....
டீலக்ஸ்பஸ்....
ஏசிபஸ்....
இப்படி எல்லா பஸ்சும் இருக்கு...
ஆனா நீங்க கேட்ட சிலபஸ் மட்டும் கிடைக்கவே இல்ல!
பஸ் டெபோவிலேயே கேட்டுட்டேன்!


10) வேடிக்கையான ஆனால் உண்மையான ஒன்று.....
உலகத்திலேயே மிகவும் நீளமான 5 நிமிடம்...
“கிளாஸ்’ல பீரியட் முடியப்போற கடைசி 5 நிமிடம்..”
உலகத்திலேயே மிகவும் குறைவான 5 நிமிடம்...
“எக்ஸாம் எழுதிகிட்டு இருக்குறப்ப கடைசி அந்த 5 நிமிடம்”...

11) கேர்ள்: அன்பே! உன்னை கடைசி வரைக்கும் கைவிட மாட்டேன்!
பையன்: உங்க வீட்ல யாரையுமே நான் நம்ப மாட்டேன்!
கேர்ள்: ஏன்?
பையன்: உங்க அக்காவும் இப்படித்தான் சொன்னா!

12) பிப்ரவரி – 14 --- காதலர் தினம்...
நவம்பர் – 14 --- குழந்தைகள் தினம்...
நீதி: மனிதன் எதை செய்தாலும் ஒரு காரணமாகவே செய்வான்.

13) பையன்: உனக்கு வயசு என்ன ஆவுது?
கேர்ள்: ஆடி வந்தா 18.
பையன்: அப்ப நடந்து வந்தா?...???

14) முதல் பெஞ்ச்ல இருப்பவனுக்கு பிரச்சனைய எப்படி தவிர்ப்பது என்றுதான் தெரியும்... ஆனா கடைசி பெஞ்ச்ல இருப்பவனுக்குதான் எப்படி பிரச்சனையே எதிர்கொள்வது என்பது தெரியும்...
--- MBBS (Member of Back Bench Students)

15) லேடி: சார்...நான் மாசமா இருக்கேன்...
மேனேஜர்: அதுக்கு என்ன?
லேடி: நீங்கதானே மாசமானா சம்பளம் தருவேன்னு சொன்னீங்க....
மேனேஜர்: ?!?....

16) எங்க தெரு நாய்க்கிட்ட ஜூலின்னு சொன்னா வால ஆட்டுது... ஜிம்மின்னு சொன்னா தலைய ஆட்டுது.... ஆனா உங்க பேர சொன்னா மட்டும் வெக்கப் படுது...
இதெல்லாம் நல்லா இல்ல... சொல்லிட்டேன் ஆமா....

17) லவ்வை தவிர நமக்கு வலியான நிமிடங்கள் என்பது... எக்ஸாம் எழுதி விட்டு நண்பனுக்காக காத்திருக்கும் அந்த நிமிடங்கள்... இப்படி யோசித்துக்கொண்டு... “ங்கொய்யால ஒரு வேல பாஸ் ஆயிடுவானோ!?!”....

18) “படிக்காதவனா” இருந்தா தமன்னா மாதிரி ஒரு பிகர் செட் ஆகும்....
அரியர் வச்சா சமீரா ரெட்டி மாதிரி ஒன்னு பிக்கப் ஆகும்...
நல்லாப் படிச்சா மவனே “காதல் கொண்டேன்” தனுஷ் நிலைமை தான்... இப்ப தெரியுதா? நாங்களெல்லாம் ஏன் படிக்காம அரியரோட இருக்கோம்ன்னு......

19) நான் உங்க லவ்வர பஸ் ஸ்டாண்ட்’ல பார்த்தேன்...
அவ என் பக்கத்துல வந்தா...
ரொம்ப பக்கத்துல வந்தா....
வந்து எங்கிட்ட ஒன்னு சொன்னா...
“கொஞ்சம் ஓரமா போங்க...குப்பை அள்ளனும்னு”
ஆமாம்.......சொல்லவே இல்ல!!!!!!!!!!!

20) ஒரு ஏழைப் பையனின் கவிதை...
எதிர் வீட்டு
ஜன்னலைப்
பார்த்தேன்..
நிறைய சட்டைகள்.....
என்
சட்டையைப்
பார்த்தேன்...
நிறைய
ஜன்னல்கள்....
/
/கலக்கல் தொடரும்.
/

Monday, March 1, 2010

எஸ்.எம்.எஸ்.கலாட்டா – 01-03-2010

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.
/


1) கல்யாணிக்கு, கல்யாணம் பண்ண கல்யாணி அப்பா கல்யாண சுந்தரம் கல்யாணிக்கு கல்யாணம் என்ற மாப்பிளைய கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணினார். கல்யாணிக்கு கல்யாணம் புடிக்காம கல்யாணம் வேணாம்னு சொல்ல, கல்யாணி கல்யாணத்தைப் புடிக்காமத்தான் கல்யாணம் வேணாம்னு சொல்றலோன்னு கல்யாணி கல்யாணத்துக்கு கல்யாணம் வேணாம்னு கல்யாணராமன் என்ற மாப்பிளையை பார்க்க, கல்யாணி கல்யாணமே வேணாம்னு கல்யாணராமன்ட்ட சொல்ல, கல்யாணி அப்பா கல்யாணி கல்யாணத்த எப்படி நடத்துவாரு? யோசிங்க!.....

2) நாஸா ஐஸ்’ம், தண்ணீரும் நிலாவுல கண்டுப் பிடித்துருக்காங்க, நாம சரக்கும், முறுக்கும் கொண்டு போனா மட்டும் போதும்!!


3) சும்மா இருக்குறவன் சும்மா இல்லாம சும்மா இருக்குறவனுக்கு சும்மா சும்மா மெசேஜ் அனுப்பி வச்சா சும்மா இருக்குறவுங்க சும்மா சும்மா மெசேஜ் அனுப்புறவங்கள சும்மா விடமாட்டாங்கன்னு சும்மா சொல்றேன். இப்போ நீங்க சும்மா இருந்தா சும்மா இருக்குறவங்களுக்கு இந்த மெசேஜ்’ஐ சும்மா போர்வேர்டு பண்ணுங்க. இல்லன்னா சும்மா இருங்க. -----
BY
சும்மா இருக்க முடியாம சும்மா இருப்பவர்களுக்கு சும்மா மெசேஜ் அனுப்புவோர் சங்கம்.

4) ஒரு சர்வே:-
500 பக்கம் உள்ள ஒரு புத்தகத்தை எத்தனை நாளில் படிக்க முடியும்?
எழுத்தாளர்: ஒரு வாரம்.
டாக்டர்: இரண்டு வாரம்.
வக்கீல்: ஒரு மாதம்.
ஸ்டுடன்ட்: தேர்வுக்கு முதல் நாள் இரவு மட்டும் போதும்!! இதுதான் ஸ்டுடன்ட் பவர்(?) என்பது!!

5) வாழ்க்கை என்பது
மொட்டுக்கள் நிரம்பிய
மலர்களின் தோட்டம்!
நீ சிரிக்கும்போது
மட்டுமே அதில்
பூக்கள் பூக்கிறது!!

6) பல நூறு வருடம் ஆகும் ஒரு வைரம் உருவாக!
அப்படி இருக்க நீ மட்டும் எப்படி பத்து மாதத்தில்?
?
?
?
?
?
?
ஹலோ! ஹலோ! கண்ட்ரோல் யூவர்செல்ப்!!
ப்ரீ மெசேஜ்’னா இப்படி காமெடியா வரத்தான் செய்யும்.....

7) அப்பா: ஏன்டா நேத்து குடிச்சுட்டு விழுந்து கிடந்த?
மகன்: எல்லாம் கெட்ட சகவாசம்தான்பா! 6 பீர் 6 பேர். அதுல 5 பேர் குடிக்கல! இந்த மாதிரி ப்ரண்ட்ஸ் இருந்தா இப்படித்தான் ஆகும்பா!!

8) ஒரு அழகான கவிதை:-
காற்றே!
நீயும் எங்களைப்
போலத்தானா?
படிக்காமலே
பக்கத்தைப்
புரட்டுகிறாயே?!?
--- கடைசி பெஞ்ச் ஸ்டுடன்ட்ஸ் சங்கம்...

9) குங்குமம் இந்த வாரம்....
?
?
?
?
?
?
?
?
சந்தனம் அடுத்த வாரம்.
விபூதி அதுக்கு அடுத்த வாரம்.
---- கோவில் வாசலில் உருண்டு புரண்டு யோசிப்போர் சங்கம்.

10) LKG Boy- 1: மாப்ள! எக்ஸாம்’ல எதுவும் தெரியாததால எதுவும் எழுதாம வெறும் பேப்பரை கொடுத்துட்டு வந்துட்டேன்டா!
LKG Boy – 2: நானும்தாண்டா... வெறும் பேப்பரைக் கொடுத்தேன்!
LKG Boy – 1: அட முட்டாப் பயலே! ஏன்டா அப்டி பண்ணுன? டீச்சர் நம்மள காப்பி அடிச்சதா நினைச்சுட மாட்டாங்க?


11) இனிப்பான முத்தம்? --- தலையில்.
அன்பான முத்தம்? --- கன்னத்தில்.
ரொமாண்டிக்கான முத்தம்? --- உதட்டில்.
சூடான முத்தம்?
?
?
?
பைக் சைலன்சர்ல வாயை வச்சுப்பாருங்க.... தெரியும்.

12) தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்...
உங்ககிட்ட கேக்கணும் போல தோனுச்சு...
நேற்று ஒரு அழகான பொண்ணு என்கிட்டே
I LOVE YOU என்று சொன்னா..அப்படினா என்னா?
ஏதும் புக் பேரா?
---- பச்சபுள்ள சங்கம்....

13) நண்பர் – 1: என்ன மச்சான்.. ரொம்ப நாளா போனே (phone) காணோம்?
நண்பர் – 2: மாப்ள! சத்தியமா நா எடுக்கல! நல்லா தேடிப்பாரு!

14) நம்ம அய்யாசாமி ஏர்போர்ட்க்கு போன் செய்கிறார்....
“ஏங்க மும்பை டு லண்டன் எவ்வளவு நேரம் ஆகும்?”
ரிசப்னிஸ்டு: ப்ளீஸ் ஒன் செகண்ட் சார்...
அய்யாசாமி: அட ங்கொக்க மக்க என்னா ஸ்பீடு....

15) நண்பர் – 1: ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று நீ
எப்ப உணர்ந்த?
நண்பர் – 2: நான் ஆசைப்பட்ட பொண்ணையே கல்யாணம் செஞ்சுக்கிட்ட பிறகுதான்.....

16) அழகான பெண்களுக்கு 4 விஷயங்கள் பிடிக்கும்...
1. செல்போன்
2. ஸ்கூட்டி
3. பணம்
4. “மோகன்”
சில உண்மைகள் கசக்கத்தான் செய்யும்...
அதனால நீங்க கடுப்பாகதீங்க.......

17) அய்யாசாமி: ஹலோ யார் பேசுறது?
பெண்: நான் செல்லம்மா பேசுறேன்...
அய்யாசாமி: நான் மட்டும் என்ன கோவமாவா பேசுறேன்?
யாருன்னு சொல்லுமா!
பெண்: ?!?

18) அம்மா: ஏன் செல்லம் அழற?
குழந்தை: அப்பா எனக்கு முத்தம் தரல!
அம்மா: நீ நல்லாப் படிச்சா அப்பா உனக்கு கிஸ் தருவாரு!
குழந்தை: நம்ம வீட்டு வேலைக்காரி மட்டும் என்ன ஐ.ஏ.எஸ். படிச்சுருக்காளா?
அம்மா: ?!?

19) ஹாய்! என் நியூ நம்பர் 94xxxxxxx5.... please save it....
?
?
?
?
?
?
?
?
அப்புறம் ஒரு விஷயம்... என்னோட பழைய நம்பரும் அதுதான்...
என்ன பண்றது? லொள்ளு என் கூட பிறந்தது... மெசேஜ் வேற ப்ரீயா... அதனாலதான்...

20) ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம் நடிகர்கள்....
மாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப் போடுங்க சார்...
/
/கலக்கல் தொடரும்...
/
/