Tuesday, May 18, 2010

எஸ்.எம்.எஸ்.கலாட்டா – 18-05-2010

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.


1) புன்சிரிப்பை விட கண்ணீர் உண்மையானது....
ஏனெனில் எவர் முன்பும் சிரித்துவிட முடியும்!
ஆனால் உங்களுக்கு ஸ்பெசலானவரின் முன்பு மட்டுமே உங்களால் அழ முடியும்!!
2) 21-ம் நூற்றாண்டு LKG மாணவன்:
டீச்சர்! என்னப் பத்தி என்ன நினைக்குறீங்க?
டீச்சர்: வெரி ஸ்வீட் பாய்!
LKG மாணவன்: மச்சான்! சொன்னேன்ல.. அவ எனக்கு ரூட் விடுராட!!

3) என்னப் பாக்குறீங்க! ஜாக்கிசான் பொண்ணு எனக்கு அனுப்பிய லவ் லெட்டர்! நமக்கு ஜப்பான் வரைக்கும் ஆள் இருக்கு!
4) அப்பா தன் 5 வயது மகனிடம்: ஏன்டா அழற? நானும் உன்னோட பிரெண்ட் மாதிரிதான்... சொல்லு!
மகன்: அது ஒன்னும் இல்ல மச்சி! இன்னும் கொஞ்சம் ஹார்லிக்ஸ் கேட்டதுக்கு உன் ஆளு என்ன அடிச்சுட்டா!

5) ஏன் பொண்ணுங்க அழகா இருக்காங்க?
உண்மையாகவா அல்லது மேக்கப்பினாலா?
?
?
?
?
?
?
?
?
பையன்களுக்கு நல்ல இமேஜிநேசன்ஸ் இருப்பதால்!


6) கண்டக்டர்: பஸ்சுக்குள்ள வாப்பா! அதான் கடல் மாதிரி இடம் இருக்கே!
ஸ்டுடன்ட்: எனக்கு நீச்சல் தெரியாது! அதான் கரையிலேயே இருக்கேன்!
7) அய்யாச்சாமி: "I am going" ன்னா என்னடா அர்த்தம்?
நண்பன்: நான் போறேன்!
அய்யாச்சாமி: ஹே! ப்ளீஸ்.... மீனிங் சொல்லிட்டு போடா!
8) ப்ரொபசர்: படிக்குற பிள்ளைங்க ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தூங்கினா போதும்!
ஸ்டுடன்ட்: அது எப்படி சார் முடியும்? ஒரு நாளைக்கு 5 மணி நேரம்தானே காலேஜ்!

9) அதிர்ச்சியான தகவல், எல்லா செய்தி சேனல்களையும் பாருங்க!
ஒரு இறந்த பெண்ணின் உடலை நிலவில் நாசா கண்டுப்பிடித்துருக்கிறது...
பல நூற்றாண்டுக்கு முந்தைய உடலாம் அது!
எல்லோரும் குழப்பத்தில் உள்ளனர்! அது யாராக இருக்கும்?
?
?
?
?
?
?
?
அது வேற யாரும் இல்ல! நிலாவில் வடை சுட்டுட்டு இருந்த பாட்டியின் உடலாம் அது!
எனக்கு ரொம்ப மூட் அவுட்!
வடை போச்சே!


10) ஒருத்தர் கோவிலுக்கு சென்று தன் செருப்பை கழட்டி விடும் இடத்தில் "செருப்பை திருட நினைக்க வேண்டாம் -- பாக்சிங் சாம்பியன் " என்று நோட்டீஸ் வைத்து விட்டு உள்ளே சென்றார்!
சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்து தன் செருப்பை வைத்த இடத்தில் உள்ள பதில் நோட்டீசைப் பார்த்து
அதிர்ச்சி அடைந்தார். அது என்னவெனில் "என்னைப் பிடிக்க முயல வேண்டாம் -- அதெலடிக் சாம்பியன்".


11) பித்யானந்தாவின் வழக்கறிஞர் வண்டு முருகன்:  
நான் சுத்தி வளச்சு பேச விரும்பல! ..... பலா நிதி மாரனப் பார்த்து கேக்குறேன்! பன் டி.வீ  நடத்துறியாஇல்ல F டி.வீ  நடத்துறியா
என்னய்யா தப்பு பண்ணுனான் என் கட்சிக்காரன்? எதோ ஒரு ஆசையில
பஞ்சிதாவ ரூமுக்கு தள்ளிட்டுப் போயிருக்கான்!.... சரின்னு விட வேண்டியதுதானே!...
அத விட்டுட்டு கேமராவுல ஷூட் பண்ணி இருக்க!....
அத நீ மட்டும் போட்டுப் பாக்க வேண்டியதுதானே!.... அதான்யா உலக வழக்கம்!...
அத விட்டுட்டு ஊருக்கே போட்டு காட்டிருக்க நீ!.....
போட்டு காட்ட அது என்ன குடும்ப படமா?.........
நீதிபதி: மிஸ்டர் வண்டு முருகன்! கோர்ட்ல இப்படி ஆவேசப் படக் கூடாது!
வண்டு முருகன்: கடுப்பேத்துறாங்க மை லார்ட்!!
 /

/கலக்கல் தொடரும்.
/


Tuesday, May 11, 2010

மொபைலில் உங்கள் கணவரிடம் பேசக்கூடாத நேரம்..

இது எனக்கு மெயிலில் வந்தது... வார்த்தைகள் அதிகம் இல்லை... ஆனால் இந்த ஒரு படம் அறைந்தது போல் சொல்கிறது சொல்ல வந்த விசயத்தை.... என்னை மிகவும் உணர்வால் பாதித்த இந்த விளம்பரத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியதால் இங்கே உங்கள் பார்வைக்காக... இதைப் பார்த்த பிறகாவது வாகனத்தில் செல்லும்போது மொபைலில் பேச நேரிடும் சந்தர்ப்பத்தில் இந்த படம் ஒரு நொடி உங்கள் கண் முன் வந்து சென்றால் இந்த பதிவின் நோக்கம் வெற்றிப் பெற்றதாக அமையும்....
 

Monday, May 10, 2010

எஸ்.எம்.எஸ்.கலாட்டா – 10-05-2010

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.



1) எப்பல்லாம் உங்க வாழ்க்கையில கஷ்டம் வருதோ, நீங்க இத ஞாபகத்துல


வச்சுக்கங்க!

>

>

>

>

>

>

>

>

>

தயிர்ல போட்டா தயிர் வடை!

போடலன்னா மெது வடை!!

ஓட்ட இருந்த அது ஓட்ட வடை!!!

அவ்வளவுதாங்க வாழ்க்கை!!!



2) அவள் இருக்கும் வரை

எமன் கூட

என்னை ஒன்றும்

செய்ய முடியாது!

அவளை

மறக்கும் பொது

கடவுள் கூட

என்னை

காப்பாற்ற முடியாது!

அவள்?

?

?

?

?

?

"அம்மா"

அம்மாவை (பெற்ற தாயை) நேசியுங்கள்!

(அட கலி காலமே! அம்மாவுக்கெல்லாம் விளக்கம் கொடுக்க வேண்டி இருக்கே!!)



3) வாழ்க்கை ஒரு ரோஜா செடிப் போன்றது!

அதில் முள்ளும் இருக்கும்! மலரும் இருக்கும்!!

முள்ளைக் கண்டு பயந்து விடாதே!

மலரை கண்டு மயங்கி விடாதே!!

அதுதான் வாழ்க்கை!!


4) நேற்றைய தவறுகளுக்கும்

நாளைய நம்பிக்கைகளுக்கும்

இடையில் அருமையான

ஒரு வாய்ப்பு இருக்கிறது!

அதுதான் "இன்று"

அதை நேசியுங்கள்! வாழுங்கள்!!

அது உங்களுக்கானதே!!!



5) கேர்ள் ப்ரண்ட் என்பவள் ஒரு இன்டர்நெட் வைரஸ் மாதிரி...
உங்கள் வாழ்க்கையில் ENTER ஆகி,
உங்கள் பாக்கெட்டை SCAN செய்து,
உங்கள் பணத்தை TRANSFER செய்து,
உங்கள் மூளையை EDIT செய்து,
அவளுடைய பிரச்சனைகளை DOWNLOAD செய்து,
உங்கள் மகிழ்ச்சியை DELETE செய்து,
முடிவில் உங்கள் வாழ்க்கையை HANG செய்து விடுவாள்!!
அதனால் உங்கள் கேர்ள் ப்ரண்ட்'ஐ தவிருங்கள்! அவள் செல் நம்பரை
எனக்கு கொடுங்கள்! ஏனெனில் நான் ஒரு
PROFESSIONAL ANTIVIRUS!!

6) கண்டுபிடிப்பு:

உன் காதலிக்கு ஒரு "கோல்ட் ரிங்" வாங்கி கொடுக்கும்போது அவள் முகத்தில் தோன்றும் போலியான சந்தோசத்தை விட உன் நண்பனுக்கு ஒரு "கட்டிங்" வாங்கி கொடுக்கும்போது அவன் முகத்தில் தோன்றும் சந்தோசமே உண்மையான அன்பின் அடையாளம்.


7) ஆசிரியர்: ஏன்டா லேட்?

ஸ்டுடென்ட்: பைக் பஞ்சர் சார்...

ஆசிரியர்: பஸ்'ல வர வேண்டியதுதானே?

ஸ்டுடென்ட்: சொன்னா உங்க பொண்ணு எங்க கேக்குறா சார்?

ஆசிரியர்: ?!?


8) அண்ணாமலை டயலாக்:

இந்த நாள உன் காலேண்டர்'ல குறிச்சி வச்சுக்க... என்னோட கார்ட ரீசார்ஜ் பண்ணி, உன்னை விட அதிகமா SMS அனுப்பி, நீ எப்படி எனக்கு தொல்லை கொடுத்தியோ அதே மாதிரி நானும் தொல்லை கொடுக்கல, நான் "உன் நண்பன்" இல்லை.
2+2-2 = 8 கூட்டி கழிச்சிப் பாரு, கணக்கு தப்பா வரும்........


9) ஆசிரியர்: கஞ்சன்'னா யாரு?
ஸ்டுடென்ட்: நம்ம 100 SMS அனுப்பியும் பதிலுக்கு ஒரு SMS ம் அனுப்பாதவங்க சார்..
ஆசிரியர்: ஒரு உதாரணம் சொல்லு!
ஸ்டுடென்ட்: உங்க பொண்ணு சார்.
ஆசிரியர்: ?!?

10) தினம் ஒரு KURAL...
இன்றைய KURAL?

?

?

?

?

?

?

?

?


"ஊ...ஊ..ஊ... ஊ..ஊ..."

இது நரியோட KURAL...
நாளைக்கு வேற ஒரு KURAL கேட்போம்...
ம்ம்...
"ஊ...ஊ..ஊ... ஊ..ஊ..."

11) மந்திரி: மன்னா! பக்கத்து நாட்டு மன்னன் போருக்கு வருவதாகச் சொல்லி SMS அனுப்பியுள்ளான்.
புலிகேசி: இது என்ன அக்கப்போராக இருக்கிறது? என்ன செய்வது? "Message Sending Failed" என்று திருப்பி அனுப்பு!

12) ஒரு நபர் FM ரேடியோவை தொடர்பு கொண்டு,

"சார், நான் ஒரு பர்ஸ்'ஐ கீழே கிடந்தது எடுத்தேன்.. அதில் 15 ஆயிரம் ருபாய், கிரெடிட் கார்ட், ID கார்ட் இருக்கிறது..
அந்த ID கார்ட் மூலம் அவர் பெயர் மணி, 13, ஹால்ஸ் ரோடு, சென்னை" என்பதை தெரிந்து கொண்டேன்...

ரேடியோ ஜாக்கி: எவ்வளவு நேர்மையான ஆளு சார் நீங்க! ரொம்ப சந்தோசம்... அதை அவரிடம் திருப்பிக் கொடுக்க விரும்புரீங்களா?

அந்த நபர்: இல்ல..இல்ல.. அந்த நபருக்கு ஒரு சோகமான பாடலை என் சார்பா டெடிகேட் பண்ண விரும்புறேன்!


13) LKG டெரர்'ஸ் இண்டர்வியு....

சார்: நீ எங்கப் பிறந்த?

பாய்: தமிழ்நாடு

சார்: எந்தப் பகுதி?

பாய்: என்ன எந்தப் பகுதி? முழு உடம்பும் தமிழ் நாட்லதான்...

சார்: ?????... சரி.. உன் பிறந்த நாள் எப்ப?

பாய்: மார்ச் 24

சார்: எந்த வருடம்'பா?

பாய்: ஒவ்வொரு வருஷமும்தான்.... என்னையா லூசு மாதிரி கேள்வி கேக்குற... உன் ஸ்கூல்'ல எனக்கு அட்மிஷன்
வேண்டாம்..போ....


14) காலேஜ் சார்ந்த பட தலைப்புகள்:

கிளாஸ்: புரியாத புதிர்

சேர்மன்: வசூல் ராஜா

பிரின்சிபால்: இம்சை அரசன் 23ம் புலிகேசி

HOD: பிதாமகன்

Staff: படிக்காதவன்

ஸ்டுடண்ட்ஸ்: போக்கிரி

காலேஜ் காம்பஸ்: சிறைச் சாலை

பிகர்ஸ்: ரோஜா கூட்டம்

அட்டன்டன்ஸ்: கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

காலேஜ் பஸ்: சுந்தரா ட்ராவல்ஸ்

கேண்டீன்: ஈ

வாட்ச்மேன்: சாமி

எக்ஸாம்: அறிந்தும் அறியாமலும்

ரிசல்ட்: சம்திங் சம்திங்

அரியர்: எனக்கு 20 உனக்கு 18

காம்பஸ் இண்டர்வியு: திருவிளையாடல்


15) செம பஞ்ச்:

சுகர் இல்லாத காப்பிய குடிக்க முடியாது!

நல்ல பிகர் இல்லாத கிளாஸ்'ல படிக்க முடியாது!

--- பிகர் இல்லாத ஒரே காரணத்தால் சரியா படிக்காதோர் சங்கம்.

/

/கலக்கல் தொடரும்.
/
பின் குறிப்பு: சில புண்ணியவான்கள் இந்த எஸ்.எம்.எஸ் கலாட்டாக்களை அப்படியே தங்களின் தளங்களில் காப்பி- பேஸ்ட் செய்து விடுகிறார்கள். ஒரு நன்றியோ அல்லது இந்த தளத்தின் ரெபரென்ஸ் கொடுப்பதில்லை. இது என் சொந்த சரக்கு இல்லாவிட்டாலும், என்னுடைய மொபைலில் இருந்து, கைவலிக்க டைப் செய்து வெளி இடுகிறேன்.. அதற்காகவது இந்த குறைந்தப் பட்ச நாகரிகத்தை நான் எதிர்பார்ப்பது தவறில்லை என நினைக்கிறேன்... நன்றி.....