Monday, June 21, 2010

எஸ்.எம்.எஸ்.கலாட்டா – 21-06-2010

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.

1) ஆசிரியர்: டேய்! போய் வெளியில நில்லு... அப்பத்தான் உனக்கு அறிவு வரும்!
மாணவன்: அப்ப உங்க வகுப்புல உட்கார்ந்தா அறிவு வராதுன்னு சொல்லுங்க....
ஆசிரியர்: ?!?....
2) நீங்க 95% பியுட்டி
நீங்க 96% ஸ்வீட்
நீங்க 97% நைஸ்
நீங்க 98% யூத்
நீங்க 99% ஸ்மார்ட்
ஐ....... சிரிப்பைப் பாரு....
நான் சொன்னது
100% காமெடி.

3) என்னையும், ஒன்னையும்
சேர்த்து வச்சுப் பார்க்கணும்னு ஆசையா?
கீழே வாங்க....
?
?
?
?
?
?
?
"N"  "1"
பார்த்தாச்சா? இப்ப சந்தோசமா?
இப்படித்தான் புதுசா யோசிக்கணும்.....

4) அப்பா: ஏன்டா அழற?
மகன்: அம்மா அடிச்சுட்டாங்க...
அப்பா: இதுக்கா அழற...சீ..அழாத...
மகன்: யோவ்..போய்யா... உன்னை மாதிரில்லாம்  என்னால் அடி தாங்க முடியாது.....
அப்பா: ?!?...

5) உனக்கு பேசுவதற்கும், சிரிப்பதற்கும் நேரம் இல்லை என்றால்,
நீ உன் வாழ்கையில் முன்னேறிக் கொண்டு இருக்கிறாய் என்று அர்த்தம்....
---- அலெக்ஸ்சாண்டர்.

6) நாம் எப்பவுமே நம்ம வாழ்க்கையை விட "மத்தவங்க" வாழ்க்கை நல்லாருக்குன்னு நினைக்குறோம்...
ஆனா ஒன்றை மறந்து விடுகிறோம்.... நாமும் பலருக்கு "மற்றவர்" என்பதை....
 
7) உங்கள் அருகிலுள்ள "பயம்" என்பதின் கதவை மூடிப் பாருங்கள்...
எவ்வளவு சீக்கிரமாக வெற்றியின் கதவு திறக்கிறது என்பதை.....
8) மனைவி: பாருங்க உங்க அம்மா என்னை "அரை" லூசுன்னு சொல்றாங்க...
கணவன்: சரி விடு...எப்பவுமே எங்க அம்மா உன்னை குறைச்சுத்தான் மதிப்பிடுறாங்க...

9)  மனைவி: ஏங்க இன்னைக்கு குழம்பு வைக்கட்டுமா இல்ல ரசம் வைக்கட்டுமா?
கணவன்:  முதல்ல எதாவது ஒன்னு வை... அப்பறமா அதுக்கு பேரு வச்சுக்கலாம்!....
10)        என்னங்க இந்த TV'ல கோடு கோடா தெரியுது...

                நீங்க வாங்கும் போதே அன்ரூல்டு  TV ன்னு கேட்டு வாங்கி இருக்கணும்!

11) மனைவி: ஏங்க பக்கத்துக்கு வீட்டு பெண் கட்டி இருக்குற சேலை ரொம்ப நல்லா இருக்குங்க!
கணவன்:  அப்பாடி! கல்யாணம் ஆகி இந்த 5 வருஷத்துல இப்பதான் என்னோட செலெக்க்ஷன நீ பாராட்டி இருக்க!

/
/கலக்கல் தொடரும்.
/

Wednesday, June 16, 2010

படித்து முடித்தவுடன் என்ன செய்யலாம்....

பத்தாம் வகுப்பிலுருந்து தொடங்கி ஒவ்வொரு படியாக மேற்கொண்டு என்ன படிக்கலாம், என்ன மாதிரியான தேர்வு எழுதி என்ன மாதிரியான வேலையை தெரிவு செய்யலாம் என்பது வரை ஒரு முழுமையான ப்லோ சார்ட்... உங்களுக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர் பிள்ளைகளுக்கு இதை
அவசியம் தெரிவித்து உதவி செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்....

என் மெயிலுக்கு வந்ததை இங்கே உங்கள் பார்வைக்காக.....

படத்தை க்ளிக் செய்து பெரிதாக்கி காணுங்கள்...



 
வாழ்க வளமுடன்!

Monday, June 7, 2010

எஸ்.எம்.எஸ்.கலாட்டா – 07-06-2010

இங்கே நாம் பார்க்கப் போறது எனக்கு வந்த கலக்கலான எஸ்.எம்.எஸ் களின் தொகுப்பு.



1) லெக்சுரர்:  சன் பஸ்ட் வருமா? இல்ல மூன் பஸ்ட் வருமா?
ஸ்டுடன்ட்: கண்டிப்பா மூன் தான்  பஸ்ட் வரும் சார்!
லெக்சுரர்:  எப்படி சொல்ற?
ஸ்டுடன்ட்:  ஆமாம் சார்.. ஹனி மூன் வந்த பிறகுதான் சன் வரும் சார்!!

2) நம்ம அய்யாச்சாமி சின்சியர் டிராபிக் போலீஸ் தான்! இருந்தாலும் அவரை
சஸ்பென்ட் செய்து விட்டார்கள்...
ஏன்?
பின்ன... ஓவர் ஸ்பீட்ன்னு சொல்லி ஆம்புலன்ஸ்'ஐ நிறுத்தி பைன் போட்டா
சஸ்பென்ட் செய்ய மாட்டார்களா?

3) காலேஜ் கேர்ள்: டாடி! நான் காலேஜ் போயிட்டு வரேன்!
அப்பா: என்னம்மா ஸ்கூல் போயிட்டு இருந்தப்பல்லாம் "அப்பா"ன்னு கூப்பிடுவா! இப்ப
டாடின்னு கூப்பிடுற?
காலேஜ் கேர்ள்:அய்யோ! "அப்பா"ன்னு கூப்பிட்டா  லிப்ஸ்டிக் அழிஞ்சிடும்!

4) உன் வாழ்க்கை இருட்டா இருந்தால் கடவுளிடம் பிரார்த்தனை செய்!
அப்படியும் இருட்டா இருந்தா........
சான்சே இல்ல! கரண்ட் பில்லை கட்டனும்'மா! ..........

5) சிங்கத்த போட்டோல பார்த்துருப்ப!
TV'ல பார்த்துருப்ப!
ஏன் கார்டூன்ல கூட பார்த்துருப்ப!
ஆனா தனியா நின்னு இப்படி மெசேஜ் அனுப்பி பார்த்துருக்கியா?...
இப்ப பாத்துக்க!.............


6) இடி
மின்னல்
புயல்
மழை
வெள்ளம்
பூகம்பம்
எது நடந்தாலும்
ஈஸ்ட்
வெஸ்ட்
நார்த்
சவுத்
எங்க இருந்தாலும்
ஏர்டெல்
பீ எஸ் என் எல்
ஏர்செல்
வோடாபோன்
வெர்ஜின்
ரிலையன்ஸ்
எந்த சிம் போட்டு இருந்தாலும்
காலை
மதியம்
மாலை
இரவு
எந்நேரம் ஆனாலும்
நோக்கியா
மோடோரோலா
சாம்சங்
சோனி
எல் ஜி
எந்த மொபைல் வச்சுருந்தாலும்
சென்னை
கோவை
மதுரை
சேலம்
நெல்லை
திருச்சி
இந்தியாவில்
எந்த மூலையில் இருந்தாலும்
என்னோட எஸ் எம் எஸ்
சும்மா கில்லி மாதிரி
வந்து சொல்லும்
"இன்னைக்காவது பல்லை வெளக்கிட்டு சாப்பிடு"ன்னு!!

7) உலகத்தில் உள்ள 60% பசங்களுக்கு லவர் இருக்கு!
 30% பசங்களுக்கு கேர்ள் பிரண்ட்  இருக்கு!!
மீதி இருக்கும்  10% பசங்களுக்கு அறிவு இருக்கு!!!
8) ஹைக்கூ:-
நான்
உதட்டோடு
உதடாக
கொடுத்த
ஒரே முத்தத்தில்
கர்ப்பம் ஆனது
"பலூன்"!
எப்பூடி?!?

9) நம்மை
அதிகமாக
சிரிக்க வைப்பதும்
அதிகமாக
அழ வைப்பதும்
நாம்
அதிகமாக
நேசிக்கும்
ஒருவர் மட்டும்தான்!

10) வாழ்க்கை
ஒரு
பட்டம் பூச்சி மாதிரி!
லேசா பிடிச்சா
பறந்திடும்!
இறுக்கிப் பிடிச்சா
இறந்திடும்!
அதனால்
வாழ்க்கையில்
கவனமா இருங்க!...
 11) உங்க வாழ்க்கையில் வெற்றி பெற
நீங்க இரண்டு விஷயங்களை தவிர்க்கணும்!
முதலாவது "மற்றவர்களோடு உங்களை ஒப்பிடுவதை"!
இரண்டாவது "மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை"!!
12) வாழ்க்கை சில சமயங்களில் உங்களை எதிர்பாராத திருப்பங்களில் அழைத்து செல்லும்!
அப்படி பயணம் செய்ய  பயப்பட  வேண்டாம்!
என்றாவது ஒருநாள் அது  தொட முடியாத உயரங்களில் உங்களை உட்கார வைக்கலாம்!!
 இங்க இருக்க சில எஸ்.எம்.எஸ்'  படித்து விட்டு இது என்ன காமெடியா'ன்னு கேக்காதீங்க!
லைப்'ல எல்லா சுவையும் இருக்கணும்'ல... அதுக்காகத்தான்!
(ஹ்ம்ம்... சரக்கு இப்போதைக்கு இல்லங்கறத எப்படியெல்லாம் சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கு!!)


/

/கலக்கல் தொடரும்.
/